#குறுநாவல் - இன்னும் ஒரு பெண்
#ஆசிரியர் - சுஜாதா
ஹாஹாஹா...
ஒரு வாசகனை நுனி சீட்டுல உக்காந்து கதை படிக்க வைக்க இவரால் மட்டுமே முடிகின்றது.
எப்படி இப்டிலாம் யோசித்திருப்பார் மனுசன் ? 🤔
என்னதான் பெரிய கதைக்களத்த ச்சூஸ் பண்ணி ஒருத்தர் எழுதினாலும் எல்லோராலையும் இப்படிலாம் எழுதிட முடியாது.
என் நண்பர் சொல்லி கேட்டிருக்கிறேன். இவரு எங்கல்லாம் குந்திகினு எழுதுவாருனு.
கார் டிக்கி, கழிவறை, மாடிப்படி, இப்படி எங்கலாம் தோனுதோ அங்கலாம்.
ஏம்பா, நாப்பது வயசுல ஒரு மனுசனுக்கு என்ன தோனுமோ அப்படியே எழுதி உருக வச்சிகிறாரு.
மீண்டும் ஒரு பெண் எப்படி பட்ட ஆணாய் இருந்தாலும் ஏதோ ஒரு எடத்துல ஏதோ ஒரு சந்தர்பத்துல சந்திக்கப் படுகிறாள்.
இன்னொரு பொண்ணை நினைச்சிகினு , தான் பொன்டாடிய கொலை பண்ண நெனச்சவனுக்கு எதிராகவே மாத்திரையை திருப்பிட்டாராய்யா..😂
கிளைமேக்சில கதாநாயகன் அப்டியே கண்ண மூடுரப்போ, பொன்டாட்டி,மகள், அவரோட காதலி மூனு பேரும் சிரிக்கிற மாதிரி கதையை முடிச்சதுல இருக்கு இவரோட தந்திரம் லாம்.
மொத்தத்தில ஒருத்தனுக்கு ஆப்படிக்க நெனச்சா அந்த ஆப்பு உனக்கே வந்து சேரும்னு சொல்லி கதையையும் ஜெயனையும் க்ளோஸ் பண்ணிட்டாரு.
ஒரே ஒரு கொறை..
என்ன?
கனேஷ்ம் வசந்தும் வந்துருந்தா இன்னும் கொஞ்சம் நேரம் குதூகலமா இருந்துருக்கும்...
-தேசாந்திரி
17.08.2020
நன்றி : திரு.தேசாந்திரி, வாசகசாலை மற்றும் முகநூல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக