29 அக்., 2020

கருத்து மேடை : தேடுதலுக்கு ஒரு திறந்த மனம் வேண்டும் !

ஆன்மீகம், ஜோதிடம் இரண்டிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தாலும், big bang theory, black holes, chemical origin of life on earth பற்றியும் ஈடுபாடு உண்டு. இரண்டு தரப்பையும் reconcile செய்து, மொத்தமாக புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். ஆன்மா, மறுபிறவி, கர்ம வினை ஆகியவை உண்டு என்று தெளிவாக அறிகிறேன். வெறும் நம்பிக்கை அல்ல இது. Not a matter of faith but knowledge of reality. ஆனால் 800 கோடி வருடங்களுக்கு முன்பு பூமியில் உயிர்களே உருவாகாத காலத்தில் ஆன்மாக்கள் எல்லாம் எங்கிருந்தன ? ஆக்கம், அழிவு இரண்டும் இல்லாதவை அவை. முதன் முதலில் ஒரு சில செல்கள், கடலில் உருவாகி, evolution தொடங்கியது. இன்று பல ட்ரில்லியன் உயிர்கள் உலகில் வாழ்கின்றன. இத்தனை ட்ரில்லியன் ஆன்மாக்கள் எங்கிருந்து வந்தன ? ஜோதிடத்தின் விதிகள் சூரியன், செவ்வாய், குரு போன்ற கோள்களின் அடிப்படையில் உருவானவை. சோலார் சிஸ்டம் உருவாவதற்கு முன்பு ஜோதிட விதிகள் எப்படி இருந்தன ? 1,300 கோடி வருடங்களுக்கு முன்பு singularity என்ற ஒற்றை புள்ளியில் இருந்து வெடித்து, இந்த பிரபஞ்சம் உருவாகி விரிவடைந்து வருகிறது. பிரம்மம் என்று இந்த process முழுவதையும் சொல்லலாமா ? பிரபஞ்சத்தில் வேறு எங்காவது, வேறு வடிவங்களில் உயிரினங்கள் இருக்கா ? அவற்றின் ஆன்மாக்கள் எங்கிருந்து வந்திருக்கும் ? இப்படி பல கேள்விகளுக்கு விடை தேடுகிறேன். A long, long journey... 

#தேடுதலுக்கு ஒரு திறந்த மனம் வேண்டும்

நன்றி :

கருத்துகள் இல்லை: