உலகம் போற்றும் இந்திய அறிவியல் மேதையின் பிறந்த தினம்!!
அறிவியல் ஆய்வுக்காக அரசு வேலையை உதறியவர்..! சர்.சி.வி.ராமன் பிறந்ததினப் பகிர்வு
சந்திரசேகர வெங்கட ராமன் என்ற இயற்பெயர் கொண்ட சர்.சி.வி.ராமன், 1888-ம் ஆண்டு நவம்பர்7-ம் தேதி திருச்சியை அடுத்த திருவானைக்காவல் எனும் கிராமத்தில் பிறந்தார்.
இந்தியாவில், தமிழ்நாட்டிலே உள்ள திருச்சிராபள்ளிக்கு அருகில் அமைந்த திருவானைக்காவல் எனும் ஊரில் பிறந்தார். இந்தியாவிலேயே முழுமையாகப் படித்த ஒரு அறிஞருக்கு 1930ல் நோபல் பரிசு கிடைத்தது முதல் முறையாகும்.
பெரும் புகழ் நாட்டிய இந்திய அறிவியல் அறிஞர் ஆவார். இவர் 1930ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார். ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றத்திற்கு இராமன் விளைவு
(Raman Effect) என்று பெயர். இக்கண்டுபிடிப்புக்குத் தான் இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இக்கண்டுபிடிப்பு இன்று பொருள்களின் பல விதமான பண்புகளைக் கண்டறிய (பொருளுக்கு கேடு ஏதும் நேராமலும்) மிகவும் பயனுடையதும் உலகில் புகழ் பெற்றதும் ஆகும்
சந்திரசேகர வெங்கட்ராமன் தந்தையார், இரா. சந்திரசேகர் ஐயர் ஒரு ஆசிரியர். தன் தந்தை விசாகப்பட்டினத்தில் இயற்பியல் விரிவுரையாளராகப் பணியாற்றியதால் வெங்கட்ராமன் அங்கேயே தன் பள்ளி படிப்பை முடித்தார். அவர் 1904 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரியில் தன்னுடைய B A பட்டப்படிப்பை சிறப்பு தகுதியுடன் முடித்தார். வெங்கட்ராமன் தன் முதுகலை பட்டப்படிப்பை அதே கல்லூரியில் தொடர்ந்தார். 1907 ஆம் ஆண்டு ஜனவரியில் M A பட்டப்படிப்பு தேர்வில் எல்லாப் பாடங்களிலும் சாதனை மதிப்பெண்கள் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். 1907ஆம் ஆண்டு பிப்ரவரியில் நிதித்துறை தேர்வு எழுதி அதில் முதிலிடம் பெற்றார். 1907ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் கொல்கத்தாவில் உள்ள கணக்குத் துறை தலைமை அலுவலராக தனது வாழ்க்கையைத் துவங்கினார்.
சி. வி. இராமன் அவர்கள் பட்டம் பெற்றதும், அறிவியல் துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் இல்லாததால், இந்திய அரசுப் பணவியல் துறையில் 1907ல் ஒரு கணக்காயராகச் சேர்ந்தார். என்றாலும் பணியின் கூடவே கொல்கத்தாவில் உள்ள மருத்துவர் மகேந்திரலால் சர்க்காரால் நிறுவப்பட்ட இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகத்தில் (Indian Association for the Cultivation of Science), ஒளிச்சிதறல் பற்றி செயல்வழி (செய்முறை) ஆய்வுகள் நடத்தி வந்தார். பின்னர் 1917ல் கொல்கத்தாப் பல்கலைக்கழகத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்டிருந்த பாலித் பீட இயற்பியல் பேராசிரியராகச் சேர்ந்தார். கொல்கத்தாவிலே 15 ஆண்டுகள் கழித்த பிறகு, இவர் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் (Indian Institute of Science) 15 ஆண்டுகள் கழித்தார். அதன் பின் அவராகவே நிறுவிய இராமன் ஆய்வுக்கழகத்தில் (Raman Research Insitute) இயக்குநராக கடைசி நாட்கள் வரை பணியாற்றி வந்தார். இவர் நவம்பர் 21, 1970ல் இவ்வுலகில் இருந்து பிரிந்தார்.
அவருடைய கண்டுபிடிப்பு ‘ராமன் விளைவு' (Raman effect)என்றும் அழைக்கப்படத் தொடங்கியது.நோபல் பரிசு மட்டுமல்ல மாணவர்களே, ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே, இவருக்கு லண்டனில்உள்ள ராயல் சொசைட்டியின் ‘ஃபெல்லோஷிப்’ (1924), பிரிட்டிஷ் அரசால் இவருக்கு நைட் ஹூட் பட்டம், சர் பட்டம் அளிக்கப்பட்டது (1929).
அதேபோல், இத்தாலி நாட்டின் உயர் பதக்கமான ‘மேட்யூச்சி’, மைசூர் அரசரால் ராஜ்சபாபூசன் பட்டம் (1935), பிலிடெல்பியா நிறுவனத்தின் பிராங்க்ளின் பதக்கம் (1941), இந்தியாவின் உயர் விருதான பாரத ரத்னா விருது ( 1954) அவருடைய வாழ்நாளிலேயே அளிக்கப்பட்டது. அகில உலக லெனின் பரிசு (1957) உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பதக்கங்களையும், விருதுகளை அவர் பெற்றுள்ளார்.
இந்தியாவில் இருந்து படித்தாலும் கூட ஏன் எதற்கு எப்படி என்ற கேள்விகளை உங்களுக்குள் விதைத்துக்கொண்டு இருந்தால் ஒருநாள் நிச்சயமாக நோபல் பரிசு வெல்லும் அளவிற்கு மிகப்பெரிய சாதனைகளை அறிவியல் துறையில் நிகழ்த்துவிட முடியும் என 100 ஆண்டுகளுக்கு முன்னரே ஒருவர் நிரூபித்துக்காட்டிவிட்டார் என்றால் அவர் சர் சிவி ராமன் தான். பெற்றோர்களுக்கு அவர் சொல்லிக்கொள்ளும் ஒரே ஒரு அறிவுரை – பிள்ளைகள் எதாவது கேள்விகளை கேட்டால் அதை தவிர்த்துவிடாமல் அதற்கு பதில் கூறுங்கள் என்பதுதான்.
ராமன் விளைவு'க்காக நோபல் பரிசும் பெற்றார். நோபல் பரிசுக் குறிப்பில் இருக்கும் முதல் தமிழ்ப் பெயருக்குச் சொந்தக்காரரான சர் சி.வி.ராமனின் பிறந்த தினம் இன்று.
ராமன் அவர்கள் தன் நெற்றியில் எந்த விதமான மதச் சின்னமும் கூடாது என்று நினைப்பவர். அதேசமயம் மரபு ரீதியான பழக்க வழக்கங்களை விரும்புவார்.’
‘சொர்க்கம் நரகம்,மறுபிறப்பு,அமரத்துவம் என்பதெல்லாம் இல்லை. மனிதன் பிறக்கிறான்; வாழ்கிறான்; இறக்கிறான் என்பது மட்டுமே உண்மை. ஆகவே அவன் வாழ்க்கையை முறையாக வாழ வேண்டும். ’(A.Jeyraaman Ayyaasaamy ( 1989) page 143)
‘கடவுள் என்று ஒருவர் இருந்தால் நாம் அவரை பூமியில் தேட வேண்டும். அங்கு இல்லையென்றால், தேடுமளவுக்கு அவர் மதிப்பு வாய்ந்தவர் இல்லை. வானவியல் மற்றும் இயற்பியலில் வளர்ந்துகொண்டே போகும் கண்டுபிடிப்புகள் மேலும் மேலும் கடவுள் குறித்த புரிதல்களாக தோன்றுகின்றன.’
(Rajender Singh – indian scienist and religion 2010)
சி.வி.ராமனின் வேறு சில பண்புகள் மற்றும் அறிவியல் ஆய்வு குறித்த கருத்துகள் கபில் சுப்பிரமணியம் என்பவர் 2017இல் ஸ்க்ரோல்.இன் இதழில் எழுதிய கட்டுரையில் காணப்படுகின்றன. அவற்றில் சிலவற்றை பார்க்கலாம்.
இருபதாம் நூற்றாண்டு இயற்பியல் வரலாற்றில் ராமனது வாழ்க்கை, கால முரணாகத் தோன்றலாம். அறிவியல் தொழில்மயமாக மாறிக்கொண்டிருந்தபோது அவர் அதை ஒரு ஆர்வமாகக் கொண்டிருந்தார். குவாண்டம் இயற்பியலோடு ஒப்ப முயற்சிக்கும் செவ்வியல் இயற்பியலாளராக அவர் இருந்தார். பெரும் செலவு, இயந்திரங்கள், நிபுணர் கூட்டம் ஆகியவை கொண்ட பிரம்மாண்ட அறிவியலுக்கு இயற்பியல் ஆய்வுகள் மாறிக்கொண்டிருக்கும்போது குறைந்த பட்ஜெட் ஆய்வாளராக அவர் இருந்தார்.
தன்னுடைய சமகாலத்தவர்கள் போல அவர் தேசப்பற்றை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளவில்லை. அந்நிய ஆட்சியின்போது காங்கிரஸ் கட்சி அமைத்த தேசிய திட்டக் குழுவில் பணியாற்ற மறுத்துவிட்டார். இருந்த போதிலும் விடுதலையடைந்த பின் நேருவின் புதிய அரசு அவருக்கு ‘தேசிய பேராசிரியர்’ என்ற பட்டத்தை வழங்கியது. இதனால் பணி ஓய்வுக்குப் பின்னும் அவர் முழு ஊதியம் பெற முடிந்தது. ஆனால் ராமன் இந்த பிரியத்திற்கு ஒருபோதும் கைம்மாறு செய்ததில்லை. 1948இல் நேரு அவரது சோதனை சாலைக்கு வருகை தந்தபோது, ராமன் ஒரு தாமிரப் பாத்திரத்தை புற ஊதாக்கதிர்களால் ஒளிர செய்திருந்தார். அதை நேரு தங்கம் என நினைத்து ஏமாந்தார். நேருவின் ஆளுமையில் உள்ள தவறை சுட்டிக்காட்டுவது போல ‘பிரதம மந்திரி அவர்களே, மின்னுவதெல்லாம் பொன்னல்ல’ என்று ராமன் ஓங்கி அடித்தார். (ஆயிஷா இரா நடராசன் அவர்கள் புத்தகம் பேசுது இதழில் எழுதிய ஒரு கட்டுரையில் காலியம் உலோகம் கண்டுபிடிக்கப்பட்ட சமயத்தில், அறிவியலாளர்கள் காலியத்தால் செய்யப்பட ஸ்பூனை விருந்தினர்களுக்கு கொடுத்ததையும் அவர்கள் தேநீரில் அதைவிட்டு கலக்கியதும் அது கரைந்து மறைந்ததையும் குறிப்பிட்டிருந்தார். அறிவியலாளர்கள் குறும்புக்காரர்கள் போல)
நேரு டிராம்பேயில் அணு ஆராய்ச்சிக் கழகம், ஸிஎஸ்ஐஆர் சோதனை சாலைக் கழகங்கள் போன்ற தனித்துவமான நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் அதே சமயம் பல்கலைக்கழக ஆய்வுகளுக்கு சொற்ப தொகையே ஒதுக்குவதுமான கொள்கையைக் கொண்டிருந்தார். இதன் மீது ராமனுக்கு சினம் ஏற்பட்டது. இதற்கு ‘நேரு-பாட்நகர் விளைவு’ என்று பெயரிட்டார். ‘ஷாஜகான் தன்னுடைய மனைவி மும்தாஜைப் புதைப்பதற்கு தாஜ்மஹாலைக் கட்டியதுபோல பாட்நகர் அறிவியல் சாதனங்களைப் புதைப்பதற்கு சோதனைசாலைகளைக் கட்டினார்’ என்று விமர்சனம் செய்தார்.
நேருவின் ‘பயனுள்ள நடைமுறை ஆய்வுகள்’ (useful applied research) என்கிற கொள்கை அழுத்தம் தவறானது என்றும் அடிப்படை ஆய்வுகள் அரசாங்கம், தொழில்துறை மற்றும் ராணுவ அழுத்தங்களிலிருந்து மட்டுமல்ல ஆசிரியப் பணி அழுத்தங்களிலிருந்தும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று வாதிட்டார். ‘அறிவியலாளர்கள் கோபுர உச்சியிலிருந்து இறங்கி வரவேண்டும்’ என்று நேரு சொன்னதற்கு, கோபுரத்தின் உச்சியிலிருப்பவர்கள்தான் அதிகம் கவனிக்கப்படவேண்டும்; அவர்களின் இருப்பிற்கும் முன்னேற்றத்திற்கும் மனித இனம் கடமைப்பட்டுள்ளது என்றும் பதிலளித்தார்.
பிரும்மாண்ட அறிவியல் என்பதையும் அவர் விமர்சனம் செய்தார். அவர் இறப்பதற்கு சில மாதங்கள் முன் 1970இல் அப்பல்லோ11 நிலவில் இறங்கியது குறித்து கேட்டதற்கு ‘எதற்காக அவர்கள் நிலவுக்குப் போவதற்கு பணத்தை வீணாக்குகிறார்கள்.அவர்கள்தான் ஏற்கனவே பைத்தியக்காரர்களாக இருக்கிறார்களே?’ என்று சொன்னாராம்.இங்கு ராமன் லூனார் என்ற நிலவைக் குறிக்கும் வார்த்தையையும் பைத்தியத்தைக் குறிக்கும் லுனட்டிக்ஸ் என்கிற வார்த்தையையும் சிலேடையாகப் பயன்படுத்துகிறார். அவரைப் பொறுத்தவரை ஏழையாகப் பிறந்தவர்கள்தான் பணத்தின் அருமையைப் புரிந்தவர்கள். வசதியானவர்கள் பணத்தை வீணாக்குபவர்கள்.
வாசிப்பை நேசித்தவர்:
விளையாட்டுச் சிறுவனாக இருந்தபோதே தன் தந்தையின் அலமாரியில் இருந்த புத்தகங்களின்வசமானார் ராமன். அங்கே இருந்த எண்ணற்ற அறிவியல் புத்தகங்கள், அவரை அறிவியலின் பக்கம் திருப்பின.
ஆசிய ஜோதி - எட்வின் அர்னால்டு
தி எலமண்ட்ஸ் - யூகிலிட்
Sensations Of Tone - Hermann von Helmholtz.
இந்த மூன்று புத்தகங்களும் அவருக்கு மிகவும் நெருக்கமானவை. சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்ற ராமன், 1907-ம் ஆண்டில் நடைபெற்ற நிதித்துறைத் தேர்வில் முதல் இடம் பெற்றார். பிறகு அவரது வாழ்க்கை கொல்கத்தாவில் தலைமைக் கணக்கு அலுவலராகத் தொடர்ந்தது. அந்த வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தபோதும் அவரது அறிவியல் ஆர்வம் காரணமாக தன் ஊதியத்தின் பெரும்பங்கை ஆய்வுக்கே செலவுசெய்தார். அப்போதுதான் அவருக்கு `இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகம்' பற்றித் தெரியவந்தது. பகல் முழுவதும் வேலை பார்த்துவிட்டு மாலையில் அங்கு சென்று ஆய்வுகள் செய்துபார்ப்பார். ஒருகட்டத்தில் தன்னுடைய வேலையைத் துறந்துவிட்டு முழுநேரமாக ஆய்வை மேற்கொள்ள ஆரம்பித்தார்.
ஆய்வுக் கருவிகள் கண்டுபிடிப்பு:
தான் மேற்கொள்ளும் ஆய்வுக்குத் தேவையான சிறுசிறு கருவிகளைத் தானே உருவாக்கினார். முக்கியமான சில கருவிகளை மட்டுமே வெளிநாட்டிலிருந்து வரவழைப்பார். ஆய்வுகளை, மிகவும் சிக்கனமாகச் செய்து முடிப்பார். இவை தவிர, அறிவியல் இதழ் ஒன்றையும் நடத்திவந்தார். Mediterranean Sea வழியாகக் கடற்பயணம் மேற்கொண்டிருக்கும்போதுதான் `கடல் மற்றும் வானம் நீல நிறமாக இருப்பது ஏன்?' என யோசித்ததன் விளைவுதான் `ராமன் விளைவு'க்கு வித்தானது. தன் ஆய்வு மாணவர்களிடம், `அறிவியலை, கற்றலின் வழி மட்டுமே கண்டடைய முடியாது; தொடர்ச்சியான கேள்வி கேட்பதன் மூலமாகத்தான் அடைய முடியும்' என்பார். ராமனின் அந்தத் தொடர் கேள்வி கேட்கும் தன்மைதான் அவரை நோபல் பரிசு வரை அழைத்துச் சென்றது.
நோபல் பரிசு:
நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர் ஆர்தர் காம்ப்டனின் X- கதிர்கள் குறித்தான ஆய்வு, ராமனை `ராமன் விளைவு' குறித்த ஆய்வுக்குத் தள்ளியது. தொடர்ச்சியான ஆய்வுகளின் வழியே அதில் வெற்றியும் கண்டார். 1954-ம் ஆண்டில் பாரத் ரத்னா விருதும், 1957-ம் ஆண்டில் லெனின் அமைதிப்பரிசும் பெற்றார். இவரது மார்பளவு சிலை ஒன்று கொல்கத்தாவின் பிர்லா இண்டஸ்டரியல் அண்ட் டெக்னாலஜி நிறுவனத்தில் வைக்கப்பட்டுள்ளது. ராமன் விளைவு கண்டுபிடிக்கப்பட்ட பிப்ரவரி 28-ம் தேதி `தேசிய அறிவியல் தின'மாகக் கொண்டாடப்படுகிறது.
`ஐந்து வயதிலிருந்தே குழந்தைகளை விஞ்ஞானியாக வளர்க்க வேண்டும். அவர்களின் கேள்விகளை மதித்து சலிப்படையாமல், நாம் அதற்குப் பதில் சொல்ல வேண்டும். அவர்களின் கற்றல் அறிவு, புத்தகங்களோடு தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நம் நாடு அறிவியலில் ஒளிரும்' என்பார் ராமன். சம்பளம், டார்கெட் எனத் தங்கள் கல்வி, அறிவு முழுவதையும் பணம் சம்பாதிக்கப் பலரும் முதலீடு செய்கையில், மிகப்பெரிய வேலையை உதறித் தள்ளிவிட்டு, தனக்கான திறமையும் விருப்பமும் உள்ள ஒன்றில் சிகரம் தொட்ட சர் சி.வி.ராமனும் `உலக நாயகன்'தான்.
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக