7 நவ., 2020

கருத்து மேடை : ஒரு இளம்விவசாயியின் குரல்

#ஒரு_இளம்_விவசாயியின்பதிவு....!!

ஆயுத பூஜை காலத்தில் வாழை தாரை 1 டன் 8000 ரூபாய்க்கு கூட யாரும் வாங்க முன்வர வில்லை. 

"மனம் தளரவில்லை" 

வெள்ளி கிழமை 1டன் வெட்ட வேண்டியது யாரும் வராத காரணத்தால் நன்கு தேறிய அரை டன் வாழை தாரை மட்டும் வெட்டினேன் எல்லாத்தையும் பழுக்க வைத்தேன்.

(ஞாயிறு ஆயுத பூஜை).

 ஆயுத பூஜை காலை விடியற்காலம் 4 மணிக்கு எந்திருச்சு பார்த்தேன் வாழை தார் அனைத்தும் பழுத்திருந்தது.

என் நண்பனின் உதவியால் #பேராவூரணி (தஞ்சாவூர் மாவட்டம்) யில் எனது சொந்த ஊரிலே 4:30AM டாடா ACE ஏற்றி மக்கள் கூடும் இடத்தில் இறக்கினேன். அதன் கூடவே வாழை கட்டையையும் இலையையும் இறக்கினேன்.

 நல்ல வியாபாரம் மாலை 6 மணிக்கெல்லாம் எல்லாத்தையும் விற்று விட்டேன். கையில் எல்லா செலவும் போக 10,000 இருந்தது. 

இதில் வாழை தாரோட பங்களிப்பு 9,000 ரூபாய்.  டன் 8,000 ரூபாய்க்கு வியாபாரிடம் கெஞ்சுனேன்  எடுக்க வரல... ஆனால் நான் விவசாயியாக இருந்து விடாமல் வியபாரியாக மாறுனதால அரை டன் வாழையை 9,000விற்க முடிஞ்சது.

விவசாயி நட்டமடைய சந்தை படுத்த தெரியாததும், மதிப்பினை கூட்டி விற்பனை செய்ய இயலாததும் ஒரு மிகப்பெரிய காரணமே..

இதனைப்போல மாற்றி யோசித்தால் கூடுதல் லாபம் பார்க்கலாம்தானே???

இதற்கான கருத்தினை கமெண்ட் செய்யுங்கள் நண்பர்களே..!!

#வயலோடும்வரப்போடும்..

நன்றி :

கருத்துகள் இல்லை: