உருக வைத்த கதை மட்டும்அல்ல நிஜத்தை உரிக்கும் கதை
ஒரு மண்புழு தன் குடும்பத்தோடு தூங்கிக்
கொண்டு இருந்தது, பாதி ராத்திரியிைல் ஒரு கெட்ட ஹ, திடீரென கண்விழித்து காலைவரை உறங்கவேயில்லை அந்த மண்புழு....
ஃ
தன் இனமே மொத்தமாய் அழிந்துவிடுவது போன்ற கனவு அது..!!
காலையில் எழுந்ததும் ஊர் பஞ்சாயத்தை கூட்டி, நடந்ததை சொல்லி அக்கம்பக்கத்து ஊர்களில் இருக்கும் மண்புழுக்கள் எல்லாம் நலமாக இருக்கின்றனவா..?
என பார்த்துவிட்டு வரும்படி ஆள் அனுப்பியது..!
பார்த்துவிட்டு வருவதற்காக ஒரு மண்புழு பயணத்தை தொடங்கியது
ஆற்றின் ஒரத்தில் இருந்த கிராமத்தை விட்டு மண்புழு வெளியே செல்ல செல்ல வெப்பம் தலைக்கேறியது
கண்ணுக்கெட்டிய தூரம்வரை மண்புழுக்களை காணவில்லை..
பக்கத்து கிராமத்தில் தூரத்தில் ஒரே ஒரு மண்புழு மட்டும் மண்ணை கிளறிக்கொண்டு இருந்தது,
அருகில் சென்று," எல்லோரும் எங்கு சென்றார்கள் யாரையுமே காணவில்லையே..!" என்றது..!
" நான் அழைத்து செல்கிறேன் வா.." என்று அந்த மண்புழு ஒரு நீரில்லாத குட்டையின் கீழ் மரவேர்களுக்கு இடையே அழைத்து சென்றது
வேர்களுக்கு இடையே இருந்து நூற்றுக் கணக்கான மண்புழுக்கள் வெளியே வந்தன,
மொத்த ஊரில் இருந்த கோடிக்கணக்கான மண்புழுக்களில் மிஞ்சியவை இவைதான் என்று காட்டியது..!
அந்த நூற்றுக்கணக்கான மண்புழுக்களும் கூட விவசாய நிலத்தில் வாழ்ந்தவை,
மண்ணையே உணவாக தின்பதால் அவர்கள் உணவில் மண்ணள்ளி போட்டது போல் மண்ணில் ஏதோ ரசாயனம் கலந்துவிட்டதாகவும்,
அதை சாப்பிட்ட மண்புழுக்களின் உடல் கருநீலம் அடைந்து கொத்து கொத்தாக இறந்து விட்டதாகவும்,
மீதி இருந்த கொஞ்ச நஞ்ச மண்புழுக்களும் பாதுகாப்பான இடம் தேடி குட்டைக்கு அடியில் உள்ள வேர்களுக்கு இடையே வந்து பதுங்கிக்- கொண்டதாகவும் கூறின..!
பக்கத்து ஊரில் இருந்து பார்க்க வந்திருப்பதாக கூறி எல்லோரையும் வெளியே அழைக்க, எல்லா மண்புழுக்களும் பயத்தோடு வெளியே வந்தன..!
பெரும்பாலான மண்புழுக்கள் கருநீலம் அடைந்து, உடல் முழுவதும் திட்டுதிட்டாய் வெடித்து, உருவம் சிதைந்து ரத்தம் வழிந்து, தோல் வறண்டு போய், வாழ்நாளை எண்ணிக்கொண்டு இருந்தன..!
இனவிருத்தி முழுவதுமாக நின்றுபோய் விட்டதாகவும், தப்பிதவறி பிறந்தால் கூட
ஊனமுற்று பிறப்பதாகவும், பிறந்த சில நாட்களிலேயே இறந்துவிடுவதாகவும் கூறி அழுதன..!
ஊருக்குள் இந்த இடத்தை தவிர வேறு எங்கும் மண்ணில் ஈரமில்லை என்றும்,
விவசாய நிலங்கள் எல்லாம் உயிருக்கு ஆபத்தானவை என்றும்,
அக்கம்பக்கத்து ஊர்களில் கூட இதே நிலைமைதான் என்றும், இருக்கும் காலம் வரை இந்த வேருக்கு அடியில் வாழ்ந்துவிட்டு போய்சேர்ந்து விடுவதாக ஓலமிட்டு அழுதன..!
விசாரிக்க வந்த மண்புழுவுக்கு துக்கம் தொண்டையை அடைத்துவிட்டது..!!
இன்னும் கொஞ்சநாள் தான் நாங்க உயிரோட இருப்போம், உங்கள் ஊரில் ஈரமான இடம் இருந்தால் இந்த குழந்தையை அங்கே விட்டுவிடுங்கள் பிழைத்துக்கொள்ளட்டும் என்று ஒரு மண்புழு தன் குட்டியை கொடுத்து கண்ணீரோடு வழியனுப்பி வைத்தது..!
விட்டுபோக முடியாமல், அந்த மண்புழு கிளம்பிச்செல்ல,'' வந்த வழியே போயிடுங்க மேற்கு பக்கம் போயிடாதீங்க.. மொத்தம் விவசாய நிலம் உங்க உயிருக்கே ஆபத்தா போயிடும்..'' என எச்சரித்து வழியனுப்பிவிட்டு வேர்களுக்குள் போய் பதுங்கிக்கொண்டன அத்தனை மண்புழுக்களும்.
விவசாய நிலத்தில் கால் வைக்காமல் கவனமாய் ஊர்போய் சேர்ந்தது அந்த மண்புழு..!
மண்புழுவுக்கு மட்டுமல்ல இந்த மண்ணில் வாழ்கின்ற ஒவ்வொரு உயிருக்கும் மரணவாசலை திறந்துகொண்டு இருக்கிறது நம் மனிதவாசம்.!
ஆழமாக சிந்தியுங்க.. கதை கண்ணில் தெரியும்..புரியும்..
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக