26 ஜன., 2021

இன்றைய குறள்

குறள் : 759
செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃதனிற் கூரிய தில்

மு.வ உரை :
ஒருவன் பொருளை ஈட்டவேண்டும்  அவனுடைய பகைவரின் செருக்கைக் கெடுக்க வல்ல வாள் அதைவிடக் கூர்மையானது வேறு இல்லை.

கலைஞர் உரை :
பகைவரின் செருக்கை அழிக்கும் தகுதியான கருவி பொருளைத் தவிர வேறொன்றும் இல்லாததால் அதனைச் சேமிக்க வேண்டியுள்ளது.

சாலமன் பாப்பையா உரை :
எதையும் சாதிக்க எண்ணுவோர் பணத்தைச் சம்பாதியுங்கள்; பகைவரின் அகங்காரத்தை அறுக்கும் கூரிய ஆயுதம், பணத்தைவிட வேறு இல்லை.

Kural 759
Seyka Porulaich Cherunar Serukkarukkum
Eqkadhanir Kooriya Thil

Explanation :
Accumulate wealth; it will destroy the arrogance of (your) foes; there is no weapon sharper than it.
💐

கருத்துகள் இல்லை: