நான் சினிமாவில் புகழின் உச்சியில் இருந்தப் போது..
அமெரிக்காவில் இருந்து,
நான் பிறந்த
லண்டன் மாநகருக்கு சென்றேன்..
நான் இளமையில் பசியுடன்,கிழிந்த சட்டையுடன்.. நடந்து சென்ற அந்த
இலண்டன் வீதி தெருக்களில் தான் இப்போது..
என்னை காண இலட்சக் கணக்கில்
மக்கள் திரண்டனர்..
ஆனால் நான் பிச்சைகாரனாய் இருந்த போது என்னை நேசித்த
என் காதலியை தேடினேன்..
அவள் இல்லை..
அன்று வறுமை எங்களை பிரித்தது..
இன்று திரையில் என்னை இலட்சக்கணக்கில் கண்கள்
காண்கின்றன..
நான் தேடுவதெல்லாம் வீதிகளில்
ஏழையாய் நடந்து சென்ற போது என்னை ஐென்னல் வழியாக பார்த்து சிரித்த அந்த கண்களை தான்...
பணம் நமக்கு எல்லாவற்றையும்
கொடுக்கலாம், ஆனால்
வறுமை நம்மிடம் இருந்து பறித்த
சிலவற்றை
பணத்தால் திருப்பி தர
முடியாது... இப்போதும் வறுமை தான் வென்றது...!!
-சார்லி சாப்லின்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக