27 ஜன., 2021

இன்றைய குறள்

குறள் : 756
உறுபொருளும் உல்கு பொருளுந்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்

மு.வ உரை :
இறையாக வந்து சேரும் பொருளும்  சுங்கமாகக் கொள்ளும் பொருளும்  தன் பகைவரை வென்று திறமையாகக் கொள்ளும் பொருளும் அரசனுடைய பொருள்களாகும்.

கலைஞர் உரை :
வரியும், சுங்கமும், வெற்றி கொள்ளப்பட்ட பகை நாடு செலுத்தும் கப்பமும் அரசுக்குரிய பொருளாகும்.

சாலமன் பாப்பையா உரை :
வாரிசுதாரர் இல்லாமல் வந்த பொருள் வெளிநாட்டு பொருட்களுக்கு விதிக்கப்படும் வரி தன் பகைவர் தனக்குக் கட்டும் கப்பம் என்னும் இவை எல்லாம் அரசிற்கு உரிய பொருள்களாம்.

Kural 756
Uruporulum Ulku Porulumdhan Onnaarth
Theruporulum Vendhan Porul

Explanation :
Unclaimed wealth  wealth acquired by taxes  and wealth (got) by conquest of foes are (all) the wealth of the king.💐

கருத்துகள் இல்லை: