3 பிப்., 2021

இன்றைய முக்கிய தலைப்புச் செய்திகள் - புதன்கிழமை, பிப்ரவரி 3, 2021

இன்றைய முக்கிய தலைப்புச் செய்திகள் - தினமலர் சென்னை, புதன்கிழமை,  பிப்ரவரி 3, 2021

1. தமிழக சட்டசபை கூட்டத்தொடர் 5ம் தேதி வரை நீட்டிப்பு - எதிர்க்கட்சியினர் புறக்கணிப்பு 

2. தமிழகத்தில் 195 தனியார் மருத்துவமனைகள் கொரோனா தடுப்பூசி போட அனுமதி 

3. ஜனவரி மழையால் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்ய மத்திய குழு தமிழகம் வருகை 

4. பிரிட்டனில் இருந்து பரவிய கொரோனா : தமிழகத்தில் 47 பேர் பாதிப்பு 

5. அனைவருக்கும் தடுப்பூசி - சட்டசபையில் கவர்னர் உறுதி 

6. விலை விஷயத்தில் விதிமீறும் மின்னணு வர்த்தக நிறுவனங்கள் 

7. ஜனவரி இறுதிவரை 200 டிஎம்சி காவிரி நீரை தந்தது கர்நாடகா

8. ஆண் பெண் திருமண வயது - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் 

9. கொரோனா வேகம் குறைகிறது - பலி எண்ணிக்கையும் வீழ்ச்சி 

10. தாய்பால் வங்கி - கேரளாவில் 5ம் தேதி துவக்கம் 

11. நாட்டின் 63 மாவட்டங்களில் ரத்த வங்கி இல்லை 

12. கிருஷ்ணகிரி  அரசு மகளிர் கல்லூரியில் அகற்றப்படாத கொரோனா படுக்கைகள் - கல்லூரியில் வகுப்பு நடத்துவதில் சிக்கல் 

13. இராமேஸ்வரம் கோவில் தீர்த்தங்களில் பத்து மாதங்களுக்குப் பின் புனித நீராடல் 

14.திருவையாற்றில் தியாகராஜர் ஆராதனை விழாவில் கலைஞர்கள் இசை அஞ்சலி 

15. ஆன்லைன் கேம் மோகம் - மயங்கி விழுந்து மாணவர் பலி

16. அத்திக்கடவு-அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டத்தில் 67 சதவுத பணி நிறைவு 

17. அமெரிக்க நாஸா செயல் தலைவராக  இந்திய பெண் நியமனம் - பவ்யா லால் 

18. சிபிஎஸ்இ பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு 

19. மலேரியா ஒழிப்பு திட்டத்தின் சர்வதேச ஓருங்கிணைப்பாளராக ராஜ் பஞ்சாபி என்ற இந்தியரை புதிய அதிபர் பைடன் நியமித்தார் 

தினமலர் நாளிதழ்  சென்னை இணைப்பு 

1. அனகாபுத்தூர்-தரப்பாக்கம் மேம்பாலம் விரைவில் திறப்பு - 12 ஆண்டு கால பிரச்சினைக்குத் தீர்வு 

2. ஆக்கிரமிப்பாளர் பிடியில் சிக்கிய ரூ. 3.65 கோடி அரசு நிலம் மீட்பு 

3. துணை மின்நிலைய வளாகத்தில் நீரூற்று - வடிகால் அமைப்பதில் மாநகராட்சி மெத்தனம் 

4. நீர்நிலை ஓரங்களில் மருத்துவக் கழிவுகள் - சிசிடிவி பொருத்த தீர்ப்பாயம் உத்தரவு

5. ரூ. 2.66 கோடிக்கு பாறைகள் ஏலம்விட சிஎம்டிஏ திட்டம் 

6. சென்னை புத்தகக் காட்சி பிப்ரவரி 24 முதல் துவக்கம் 

தேர்வு & தொகுப்பு - சூரி

நன்றி :  தினமலர் சென்னை

கருத்துகள் இல்லை: