13 பிப்., 2021

கவிதை நேரம்


ஐம்பூதம் போல் வாழ்க்கை

மண் திணிந்த நிலனும்,
நிலம் ஏந்திய விசும்பும்,
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்,
தீ முரணிய நீரும், என்றாங்கு ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்

--- புலவர்.முரஞ்சியூர் முடிநாகராயர், புறநானூறு 

பொருள் :- 

நிலம் போல் பொறுமை, வானம் போல் சூழ்திறன், காற்றைப் போல் வலிமை, தீயைப் போல் எரிக்கும்-திறன், நீரைப் போல் அளிக்கும் கொடைத்திறன் ஆகியவற்றை உடையவன் நீ.

நன்றி :


கருத்துகள் இல்லை: