3 மார்., 2021

இன்றைய திருமந்திரம்

திருமந்திரம் - பாடல் #1048: நான்காம் தந்திரம் - 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)

நல்குந் திரிபுரை நாதநா தாந்தங்கள்
பல்கும் பரவிந்து பாரண்ட மானவை
நல்கும் பரைஅபி ராமி அகோசரி
புல்கும் அருளும்அப் போதந்தந் தாளுமே.

விளக்கம்:

பாடல் #1047 இல் உள்ளபடி அருளுகின்ற திரிபுரை சக்தியானது ஒலியாகவும் அந்த ஒலியின் எல்லையாகவும் இருக்கின்றது. திரிபுரையே உணரமுடியாத பேரொளியாகவும் இருந்து உலகங்கள் அண்டசராசரங்கள் அனைத்திற்கும் பரவிப் பெருகுகின்றது. இந்த ஒலி ஒளியாக இருக்கும் திரிபுரையே அனைத்தையும் அருளுபவளாகவும் பேரழகு மிகுந்தவளாகவும் உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவளாகவும் இருந்து அன்போடு ஞானத்தை அருளி ஆட்கொள்கின்றாள்.

கருத்து: பரை எனும் அசையும் சக்தியும், பேரழகு மிகுந்த அபிராமியும், ஐந்து கோசங்களுக்கும் அப்பாற்பட்ட அகோசரியும் ஆகிய இந்த மூன்று சக்தி வடிவங்களும் திரிபுரையாகும்.

நன்றி :

கருத்துகள் இல்லை: