பறந்து, பறந்து வந்தாங்க,
பரப்புரை கேட்க சொன்னாங்க,
அண்டை மாநில மந்திரிகள் கூட,
அனாயாசமா வந்து போனாங்க,
பல்லாயிரம் கி.மீட்டர் பயணிச்சாங்க,
‘பரபர’ன்னு இருந்தாங்க,
வாக்காளன் வந்து குவிய,
வாரி, வாரி இறைச்சாங்க,
பணத்தை, வாரி இறைச்சாங்க!
லட்சம் கூட்டம் சேர்ப்பதே,
லட்சிமாய் வைச்சாங்க!
கொரோனா,
ஒழிஞ்சு போச்சுன்னு சொன்னாங்க,
ஒளிச்சு வைச்சோம்னு சொல்லலயே!
பரப்பு உரைன்னு தான் சொன்னாங்க
பரப்பி விடுவோம்னு சொல்லலயே!
அன்று,
சமூக இடைவெளி
என்ன விலைன்னு கேட்டாங்க...
இன்று,
இடைவெளி இல்லைன்னா
விலை (அபராதம்) கொடுக்க சொல்றாங்க...
அன்று,
கூட்டமாய் சேர பணம் கொடுத்தாங்க.
இன்று,
கூட்டமாய் சேர்ந்தாலே பணம்
(அபராதம்) கேட்கிறாங்க.
ஆக, மொத்தம்,
ஏமாளியும் நாம தான்;
கோமாளியும் நாம தான் 😢😢😢
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக