உணவு யுத்தம் 🍛😍😍
எஸ். ராமகிருஷ்ணன்.
பெரும்பாலும் சோறு என்ற சொல்லையே பயன்படுத்த விரும்பியதால், விரும்புவதால் சற்று உற்று நோக்குகிறேன். கண்டும் காணாமல் கடந்து செல்ல முடியாதவை சோறு மட்டும் அல்ல. சோறு என்ற சொல்லும் தானே... அதனால் சோறு என்ற சொல்லுக்கான எஸ். ரா அவர்களின் பதிவையும் கடந்து செல்ல முடியவில்லை.
" சோறு" என்ற சொல்லை ஏன் படித்தவர்கள் பயன்படுத்தத் தயங்க வேண்டும்..? என அடிக்கடித் தோன்றும். அவர்களில் சிலர் கிண்டலுக்காகவும், கேலி செய்து நகைக்கவுமே சோறு என்ற சொல்லைப் பயன்படுத்துவதைக் கண்டிருக்கிறேன். உணவகங்களில் கூட சோறு என்ற சொல்லைப் பார்க்கவோ கேட்கவோ முடிவதில்லை. அங்கும் ரைஸ் தான். இப்போது வீடுகளிலும் மாறிவிட்டது போலும்.
சோறு என்ற சொல்லை பயன்படுத்தவில்லை என்றாலும் நகைக்காமலேனும் இருக்கலாம் தானே...!
நன்றி :
இளந்தமிழ் இளவரசி,
வாசிப்பை நேசிப்போம்,
முகநூல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக