#வாசிப்பு_மாராத்தான்_2021
#RM057
தாயுமானவள்
நாகூர் ரூமி
நாகூர் ரூமியின் முதல் புத்தகத்தை படிக்கிறேன். ஒரு சிறிய கருவைக் கொண்டு அழகான ஒரு கதையை நமக்கு தந்திருக்கிறார்.
சிறு வயதிலேயே தாயை இழக்கும் சிறுவன் அவனது பாட்டியாரால் வளர்க்கப்படுகிறார். அவரை 'ம்மா'
என்றே அழைக்கிறார்.
சிறுவனின் அப்பா அதே ஊரிலேயே இன்னொரு பெண்ணுடன் குடும்பமும் குட்டியுமாக வாழ்கிறார். பணத்தில் திளைக்கும் கனவான்.
பாட்டியுடனான அந்த சிறுவனது அனுபவங்களே புத்தகத்தின் பெரும் பகுதி. பெரிய அளவிலான எழுத்து நடையோ , மயக்கம் கொள்ள வைக்கும் வார்த்தகளே இல்லாத இந்த புத்தகத்தில் வேறு என்னவோ இருக்கிறது. நம்மை அவர் புத்தகத்தின் உள்ளே அழைத்துச் சென்று விடுகிறார்.
புத்தகம் படிக்கும் வாசகனாக அன்றி நீங்கள் அந்த சிறுவனோடு வாழத் துவங்குகிறீர்கள் . அதுவே இந்தப் புத்தகத்தை படிக்க போதுமானதாக இருக்கிறது .
ம்மா (பாட்டி)வின் வசவுச் சொற்களே முதலில் என்னை ஈர்த்தன. நான் அம்மாதிரியான சூழலில் வளர்ந்ததும் ஒரு காரணம் . காலை 4.30 பாங்கிலிருந்து மாலை 6.00மணி பாங்கு வரை கேட்டுக்கொண்டே 24 வயது வரை தர்கா தெருவில் வசித்தவள்.
சுற்றிலும் பள்ளி வாசல்கள், கருப்பு துப்பட்டிகள் (புர்கா), ஏட்டி ஏட்டி என்றழைக்கும் வயசுப்பெண்கள், இன்னைக்கு உங்க வீட்ல என்ன ஆனம் (குழம்பு)?என்று கேட்கும் பாசமிகு அக்காக்கள், ஆடி வெள்ளிக்கு சாம்பார் சோறு திங்கையில் வரும் பிரியாணியின் வாசனைகள், கொல்லைல போவ, கழிச்சல்ல போவ போன்ற வசைச்சொற்கள் (இன்று வரை இந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாது )......
இப்படியாக என் பால்யத்தை கிளறிக் கொண்டே சென்றது இப்புத்தகம்.
சிறுவனுக்கும் பாட்டிக்குமான உறவு அத்தனை அழகாகக் கூறப்பட்டுள்ளது. ரூமியின் புத்தகங்கள் ஜமால் முகமது கல்லூரியிலும் கேரளாவிலும் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.
ஆம்பூரில் உள்ள கல்லூரியில் ஆங்கில பேராசிரியராக பணியாற்றும் இவர் முனைவர் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது (கெட்ட வார்த்தை??? ).
நல்ல புத்தகம். கண்டிப்பாக படிக்கலாம்.
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக