24 செப்., 2021

இன்றைய திருமந்திரம் - பாடல் 1272


திருமந்திரம் - பாடல் #1272: நான்காம் தந்திரம் - 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)

தாரகை யாகச் சமைந்தது சக்கரந்
தாரகை மேலோர் தழைத்தது பேரொளி
தாரகை சந்திர னற்பக லோன்வரத்
தாரகை தாரகை தாரகை கண்டதே.

விளக்கம்:

பாடல் #1271 இல் உள்ளபடி நட்சத்திரமாகவே மாறிவிட்ட ஏரொளிச் சக்கரமானது மேலும் மேலும் விரிவடைந்து மேல் நோக்கிச் சென்று கொண்டே இருக்கும் போது ஒரு நிலையில் செழிப்பு பெற்று மிகப் பெரும் பேரொளியாக மாறுகின்றது. அதன் பிறகு பேரொளியாக இருக்கின்ற நட்சத்திரம் சந்திரனாகவும் நன்மையைத் தரும் சூரியனாகவும் மாறிக் கொண்டே வந்து சூரியன் சந்திரன் கிரகங்கள் என்று உலகத்தவர்களால் அழைக்கப்படுகின்ற அனைத்து நட்சத்திரங்களாவும் மாறி இருப்பதைக் காணலாம்.

குறிப்பு: ஆகாயத்தில் இருக்கின்ற சூரியன் சந்திரன் கிரகங்கள் என்று தனித்தனிப் பெயர்களால் அழைக்கப்படுகின்ற அனைத்துமே அறிவியலின் படி நட்சத்திரங்கள் என்றே சொல்லப்படுகின்றது.

நன்றி :

கருத்துகள் இல்லை: