திருமந்திரம் - பாடல் #1273: நான்காம் தந்திரம் - 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)
கண்டிடு சக்கரம் விந்து வளர்வதாங்
கண்டிடு நாதமுந் தன்மே லெழுந்திடக்
கண்டிடு வன்னிக் கொழுந்தன லொத்தபின்
கண்டிடு மப்புறங் காரொளி யானதே.
விளக்கம்:
பாடல் #1272 இல் உள்ளபடி காணும் படி நட்சத்திரங்களாக மாறி இருக்கின்ற ஏரொளிச் சக்கரத்திலிருந்து வெளிப்படுகின்ற வெளிச்சமானது தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும் போது அதன் மேலிருந்து வெளிப்படுகின்ற சத்தமும் அதனோடு தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும். அதனுடன் சாதகருக்குள்ளிருக்கும் அக்னியின் சுடரானது மிகவும் வளர்ந்து கொழுந்து விட்டுப் பெரும் நெருப்பாக நீண்டு ஒன்றாகச் சேர்ந்த பிறகு அதுவே அண்ட சராசரங்களில் இருக்கின்ற அடர்ந்த இருளுக்கும் வெளிச்சத்தைக் கொடுக்கும் பேரொளியாக ஆகிவிடும்.
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக