அன்பின் நண்பர்களே!
வணக்கம்!!
இன்று நாம் காணவிருப்பது
"இலக்கியங்களில் தத்துவம்" பகுதியில்.......
மூதுரை -- ஔவையார்
***********************************
கற்பிளவோடு ஒப்பர் கயவர்; கடும் சினத்துப்
பொற் பிளவோடு ஒப்பாரும் போல்வாரே - வில்பிடித்து
நீர் கிழிய எய்த வீடுப் போல மாறுமே
சீர் ஒழுகு சான்றோர் சினம். 23
கற்பிளவோ டொப்பர் கயவர்; கடுஞ் சினத்துப்
பொற்பிளவோடு ஒப்பாரும் போல்வாரே - விற்பிடித்து
நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே
சீர்ஒழுகு சான்றோர் சினம். 23
பிளந்த கல் மீண்டும் தானே ஒட்டிக்கொள்ளாது.
அதுபோல, பிரிந்த கயவர்கள் மீண்டும் ஒன்றுசேர மாட்டார்கள்.
பிரிந்த தங்கத் துகளைகள் ஒட்டிக்கொள்வது போலக் கடுமையான கோபத்தில் பிரிந்தாலும் மீண்டும் ஒட்டிக்கொள்பவர்களும் இருக்கிறார்கள்.
வில்லைப் பிடித்து எய்த அம்பு பாய்ந்தாலும் தண்ணீரில் தோன்றும் வடு அப்போதே மாறிவிடுவது போலச் சீர்மை ஒழுகும் சான்றோர் சினம் மாறிவிடும்.
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக