திருமந்திரம் -பாடல் #1258: நான்காம் தந்திரம் - 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)
மேல்வரும் விந்துவு மவ்வெழுத் தாய்விடும்
மேல்வரும் நாதமு மோங்கு மெழுத்துடன்
மேல்வரும் அப்பதி யவ்வெழுத் தேவரின்
மேல்வரும் சக்கர மாய்வரும் ஞாலமே.
விளக்கம்:
பாடல் #1257 இல் உள்ளபடி சாதகருக்குள் இருக்கும் மூலாதாரத்திலிருந்து ஏரொளிச் சக்கரம் மேல் நோக்கி ஏறி வரும் போது அதனுள் அடங்கியிருக்கும் எழுத்தின் வடிவமாக வெளிச்சமும் பீஜமாக சத்தமும் வெளிப்படும் போது அந்த எழுத்துடன் சாதகருக்குள் இருக்கும் இறைவனும் சேர்ந்து வந்தால் வெளிப்படும் ஏரொளிச் சக்கரமானது உலகமாகவே விளங்கும்.
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக