25 செப்., 2021

நூல் நயம் : ஒரு புளியமரத்தின் கதை - சுந்தர ராமசாமி



ஒரு புளியமரத்தின் கதை ஆசிரியர் -சுந்தர ராமசாமி பக்கங்கள் 222

 நாகர்கோவில் கன்னியாகுமரி க்கு இடைப்பட்ட பகுதியில் தனியாக நிற்கும் ஒரு புளிய மரத்தை சுற்றி நடக்கும் நிகழ்வுகள் பற்றி  அந்த மாவட்டத்திற்கே உரிய கரிசல் இலக்கிய தமிழ் பாணியில் அழகாக எழுதியுள்ளார் ஆசிரியர். கன்னியாகுமரி நாகர்கோவில் மாவட்டம் என்பதால் ஆங்காங்கே மலையாளம் மின்னி மின்னி வருகிறது. ஒரு ஊரில் அடையாளமாக நிற்கும் புளியமரம் பற்றியும் ,அதை ஒருவர் வெட்டவருவதையும்,வெட்டுபவரை தடுத்தது பற்றி தாமோதர ஆசான் கதையாக கூறுவது அருமை. மரத்தை சுற்றி உள்ள அரசியல் பற்றியும் அழகாக விளக்குகிறது .இந்த நாவல் ஒரு மரத்தை சுற்றி எத்தனை மாற்றங்கள் நிகழ்ந்தாலும் அந்தப் புளிய மரம் மட்டும் அப்படியே தான் நிற்கின்றது.ஒரு குளத்தின் நடுவில் வளரும் புளிய மரம் தான் இறக்கும் போது நகரின் மையத்துக்கு வந்து விடுகிறது. மரத்தை சுற்றி நடக்கும் நிகழ்வுகள் அப்படி. மற்றபடி மரம் நகரவில்லை. புளிய மரம் மரணிக்கும் போது கூட, அது பூ பூப்பதை போலவும் காய் காய்ப்பதை போலவும் இயல்பாக மரணிக்கிறது. மரணத்தை வெகு இயல்பாக ஏற்றுக் கொள்கிறதுபுளிய மரத்தின் அருகிலிருந்த காற்றாடி மரத் தோப்பை வெட்டி சாய்த்து அங்கே ஒரு பூங்காவை அமைக்க அரசாங்கம் முன்வருகிறது. மரங்கள் வெட்டப்படுவதை கூட்டமாக நின்று மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கூறும் கருத்து இன்றைய நவீன உலகின் உச்சம்.இன்றைய அரசியல் நகர்வுகளை அன்றே படம்பிடித்து காட்டியுள்ளார் ஆசிரியர்.நன்றி வணக்கம்


நன்றி :
சுபாஷ்
வாசிப்பை நேசிப்போம்

கருத்துகள் இல்லை: