#Reading_Marathon_2021
ராஜேந்திரன் பிரகாஷ்
RM ID 074
இலக்கு: 43/50
நூல்: வரலாற்றின் சுவட்டில்.. பயணக் கட்டுரைகள்
ஆசிரியர்: வானதி
பக்கம்: 124
பதிப்பகம்: கிண்டில்
#நான்காம்_ஆண்டு_விழா_வாசிப்பு_போட்டி
#பயணம்_தொடர்பானவை
பல காலக்கட்டங்களில் (2011~2018) அவரது blog இல் எழுதப்பட்ட கட்டுரைகளை தொகுத்து, கிண்டிலில் ஏப்ரல் 2020 இல் வெளியிட்டுள்ளார். சில்பி என அறியப்பட்ட பி. எம். சீனிவாசன் அவர்களின் தென்னாட்டு செல்வங்கள் என்னும் நூல் எழுத்தாளரின் பயணத்திற்கு உந்துதலாக இருந்திருக்கிறது.
வரலாற்று புனைவு நாவல்களை படிக்கும் போது, அந்த நாவல்களில் வரும் ஊர்களை சென்று பார்க்க வேண்டுமென்ற ஆவல் அனைவருக்கும் மேலிடும். குறிப்பாக பொன்னியின் செல்வன் நாவலை படிப்பவர்களுக்கு பிற்கால சோழப் பேரரசின் முக்கியமான நகரங்களை பார்க்க தோன்றும். பிற்கால சோழ வரலாற்றை பறைச்சாற்றும் வகையில் அமைந்துள்ள தஞ்சை பெரிய கோயிலை தவிர பிற கோயில்களை பெரும்பலானோர் அறிந்திருக்க மாட்டோம். அப்படி நாம் வரலாற்று நாவல்களில் படித்த, ஆனால் அதிகம் கேள்விப்பட்டிராத ஊர்களுக்கு பயணம் சென்று, இந்த பயணிக் கட்டுரைகளை நமக்கு கொடுத்திருக்கிறார். பெரும்பாலான கோயில்கள் தொல்லியல் துறையால் பாதுகாக்கபட்டு வருகிறது.
#தஞ்சை
பெரும்பாலான கட்டுரைகள் சோழ மண்டலத்திலுள்ள, பிற்கால சோழர் ஆட்சியில் சிறப்பாக விளங்கிய ஊர்களை பற்றிய பயண கட்டுரைகள். கொடும்பாளூர், பழையாறை, பட்டீஸ்வரம், திரிபுவனம், திருவையாறு, திருமழபாடி, தாராசுரம் ஆகிய ஊர்களுக்கு பயணம் மேற்க்கொண்டு, அங்குள்ள சோழர்கால கோயில்களின் வரலாற்றைப் பற்றியும், அவற்றின் இன்றைய நிலை பற்றியும் கூறியிருக்கிறார்
இந்த கோயில்களின் இன்றைய நிலையை படிக்கும் போது, நமது வரலாறு கொஞ்சம் கொஞ்சமாக சிதலமடைந்துக் கொண்டிப்பாதாகவே தோன்றுகிறது. ஆலய நற்பணிகள் என்கிற பெயரில்,வரலாற்று கோயில்களில் உள்ள ஓவியங்களில் வெள்ளை வண்ணம் பூசப்பட்டிருப்பதும், நம்முடைய கையெழுத்து கிறுக்கல்களும், நமது முன்னோர்களின் கலை அறிவை, வருங்கால சந்ததியினர் அறியாமல் போய்விடும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் நமது கையெழுத்து கிறுக்கல்கள் மற்றும் வண்ணங்களை சுரண்டுதல் போன்ற நமது நடவடிக்கைகளை நாம் மாற்ற வேண்டும்.
#காஞ்சி
இரண்டாம் நந்திவர்ம பல்லவனால் கட்டப்பட்ட வைகுண்ட பெருமாள் கோயில். இந்த கோயிலின் மற்றொரு பெயர் திரு பரமேச்வர விண்ணகரம் என்று கூறிகிறார்.
காஞ்சி கைலாசநாதர் கோயில் பற்றிய வரலாறும், அதிலுள்ள சிற்பங்கள் பற்றியும், கூடவே சிவகாமியின் சபதம் நாவலை பற்றியும், அஜந்தா ஒவியங்கள் போலவே இருக்கும் பல்லவர் கால ஓவியங்கள் பற்றியும், அவற்றின் இன்றைய நிலைப் பற்றியும் கூறியிருப்பது சிறப்பு.
#தூத்துக்குடி
பனிமய மாதா கோயில் & சந்தன மாரியம்மன் கோயில் வரலாறு பற்றிய குறிப்பு நமக்கு கிடைக்கிறது.
#கோடிக்கரை_கோடியக்காடு
கோடியக்காட்டின் இயற்கை அழகை விவரித்துள்ளார். கூடவே பூங்குழலி ஆங்காங்கே குறுக்கே வந்துபோகிறாள். சோழர் காலத்து கலங்கரை விளக்கத்தின் மிச்சம், நமது வரலாற்றின் எச்சமாக அங்கு இருக்கிறது. இந்த இடத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
#தரங்கம்பாடி
பள்ளிக் காலத்தில் சுற்றுலா சென்ற ஊர். ஆனால் எழுத்தாளர் கூறியிருக்கும் இடங்களில் கோட்டையை தவிர வேறெதுவும் பார்க்கவில்லை. அவற்றையெல்லாம் மறுபடியும் சென்று பார்க்க வேண்டும்
#செஞ்சி_கோட்டை
பெரும்பாலானோர் அறிந்த இடம் செஞ்சி கோட்டை. ஆனால் அறியாத ஒரு இடம் குந்தவை ஜீனோலயா. குந்தவை பிராட்டியால் நிவந்தம் விடப்பட்டு திருமலையில் சமணர்களுக்காய் கட்டப்பட்ட கோயில். ஸ்ரீ அரிஹந்த்கிரி சமண மடம் பற்றியும், கோயில் மற்றும் அதிலுள்ள குகைகள், குகை ஓவியங்கள் பற்றியும் கூறியிருப்பது சிறப்பு
#சீனிவாசநல்லூர் - குரங்கு நாதர் கோயில்
முசிறி அருகில் உள்ள கோயில். கி. பி.9ம் நூற்றாண்டில் பராந்தக சோழனால் கட்டப்பட்டது. முதல் முதலாய் சோழர்களால் கட்டப்பட்ட கோயில்களில் ஒன்று.
#வீராணம்_ஏரி
வீராணத்தை பற்றி எழுத்தாளர் கூறும் போதே, வந்தியதேவன் குதிரையில் செல்லும் காட்சி மனக் கண்ணில் ஒடியது.
நன்றி :
திரு.ராஜேந்திரன் பிரசாத்
வாசிப்பை நேசிப்போம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக