திருமந்திரம் - பாடல் #1280: நான்காம் தந்திரம் - 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)
விளைந்த வெழுத்தது விந்துவும் நாதம்
விளைந்த வெழுத்தது சக்கர மாக
விளைந்த வெழுத்தவை மெய்யினு ணிற்கும்
விளைந்த வெழுத்தவை மந்திர மாமே.
விளக்கம்:
பாடல் #1279 இல் உள்ளபடி அனைத்தையும் உருவாக்கி இருக்கின்ற மூல விதையாகிய எழுத்துக்களே மந்திர வெளிச்சமாகவும் (எழுத்து வடிவம்) மந்திர சத்தமாகவும் (ஒலி வடிவம்) சக்கரமாகவும் (எழுத்தும் சத்தமும் சேர்ந்த சக்கர வடிவம்) இருக்கின்றது. இதுவே தர்மத்தின் வழி செயல்படும் உலகத்தின் அனைத்து செயல்களுக்கும் மூல காரணமாக நின்று செயலாற்றுகின்றது. இந்த மூல விதையாகிய எழுத்துக்களே அனைத்து மந்திரங்களாகவும் இருக்கின்றது.
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக