8 மார்., 2023

நூல் நயம்

"என் நரம்பு வீணை ".
இசை ஞானி இளையராஜா எழுதியது. கவிதா பப்ளிகேஷன்ஸ் வெளியீடு .
முதல் பதிப்பு 2004 இரண்டாம் பதிப்பு 2013. விலை ரூபாய் 250 .மொத்த பக்கங்கள் 400.

அந்தக்கதை இந்தக்கதை சொந்த கதை என்று இளையராஜா எழுதியது போல தான் இதுவும் இருக்கும் என்று படிக்க ஆரம்பித்து என்னையே அறியாமல் ஸ்தம்பித்து விட்டேன் ஒவ்வொருவரையும் ஆழ்ந்த வரிகள் லா.ச.ரா.புத்தகம் படிப்பது போல என்னையே நான் மறந்து சில வரிகளிலேயே சில நேரங்களில் சில மணித்துளிகள் அப்படியே மூழ்கிவிட்டேன் மேலே சென்று படிக்கவும் முடியாமல் திணறி விட்டேன்.

30 ஆண்டுகளுக்கு முன்னதாக ஐந்து ஆண்டுகள் தொடர்ச்சியாக மாதாமாதம் பௌர்ணமி கிரிவலம் சென்று இருக்கிறேன் .ஒருமுறை திருவண்ணாமலை கிரிவலத்தில் இவரை சந்தித்து ஆச்சரியப் பட்டு இருக்கிறேன்.

 எழுத்தை வைத்து எழுதியவனைக் கண்டு கொள்ளலாம் .சில நேரங்களில் நிஜமாகி போவதும் உண்டு . குறளை வைத்து வள்ளுவனையும் ஆத்திச்சூடி வைத்து அவ்வையையும் பாரதி பாடல்களை வைத்து பாரதியையும் கண்டுகொள்வது போல இந்த புத்தகத்தை படித்துப
 இளையராஜா மனதையே கண்டு கொள்ளலாம்.

###₹₹#

தனது உரையில் கீழ்க்கண்டவாறு இளையராஜா கூறுவது முற்றிலும் உண்மை என்றே சொல்ல வேண்டும்.       
  
        எனக்கு புலமையும் இல்லை .தமிழும்  இல்லை ஆனாலும் எழுதி விட்டேன். காரணம் பிறவி என்னும் பெரும் நோயை விரும்பாத ஒன்று தான் .

    எதை எழுதினாலும் ,அதுவே, மையப்புள்ளி ஆகி,என்னை வட்டம் போட்டு சுற்ற வைக்கிறது.
         எந்தப் பாவமும், கவிதையும், அக்கருத்தையே தன்னுள் கொண்டிருக்கும்.

     புலமையிலும்  உணர்வே  உயர்ந்தது என்பேன் .புலமைக்கு அறிவும் உணர்வுக்கு உள்ளமும் உறுதுணை .

     மறுபடியும் பிறந்து வாரா நெறி பின் பற்ற வைப்பதே கற்ற கல்வி புகட்டும் பாடமாக இருக்க வேண்டும்.

         இந்தப் புத்தகம் எந்த உணர்வை உங்களில் ஏற்படுத்தி இருந்தாலும் அது என்னால்  ஏற்படுத்தப்பட்டது அல்ல என்பதை நிச்சயமாக நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் .

    கல்லானாயினும் கற்றவனே ஆவேன். நான் கற்பது அனைத்தும் கல்வியும் அல்ல என்பேன் .
கல்லாது விட்டதும் கல்வி இல்லையோ என்றும் கேட்பேன் ,"என்று தனது முன்னுரையில் இளையராஜா கூறியிருக்கிறார்.

##₹₹#₹₹₹

நாட்டுப்புறப்பாடல் புதுக்கவிதை வசன கவிதை மரபுக் கவிதை வெண்பா வாழ்த்துப்பா என அவரது அனைத்து வித கவிதைகளையும் படித்து முடித்ததும் பிரமிப்பு ஏற்படுகிறது எப்படி அவருக்கு எவ்வளவு சாத்தியப்படுகிறது என்று ஆத்திரப்பட்டு போகிறேன் இசையமைக்க நேரம் கிடைக்காத காலத்தில் எழுத்துக்கும் தன் நேரத்தை ஒதுக்கி சிந்தனையை விழிய வழிய விட்டிருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம் அளிக்கிறது எனக்கு இதற்கெல்லாம் காரணம் என்று அவரே அவரது இந்த கவிதையில் தெரிவிக்கிறார்
இப்படி..

பக்தி என்பது
           தனக்கு பிடித்தமான
           தெய்வத்தின் மீது 
           அன்பு செலுத்துவது .
யோகம் என்பது 
            தன் உடல் மீது 
            அன்பு செலுத்துவது .
கர்மம் என்பது 
             தான் செய்கின்ற 
             வேலைகளில் மீது 
            அன்பு செலுத்துவது ..

ஞானம் 
             மேலே சொன்ன 
             மூன்று செயல்களுக்கும்
             ஆதாரமாக இருக்கின்ற 
              தன்னை அறிவது.......

           இந்த ஒரு கவிதையையே  ஆழ்ந்து படித்தால் அவரைப்போல நாமும் ஆகிவிட முடியுமா .அதற்கு பிறவிப்பயன் வேண்டும்.

வீணை என்றால் சரஸ்வதி. சரஸ்வதி என்றால் வீணை. கல்வி ,செல்வம் ,இசை, பார்த்தா பிரம்மா ,என்று பல பொருள் கொள்ள படும் .
என் நரம்பு வீணை என்று சொல்லும்பொழுது நானே சரஸ்வதி ,நானே பிரம்மா , நானே இசை ,இசையே நான், நானே படைப்பு ,நானே படைப்புக் கடவுள் என்று சொல்லாமல் சொல்லிக் கொள்கிறார் ஆசிரியர்.உண்மையுங் கூட.

ஒரு திசையில் நின்றுகொண்டு ஆரோகணம் அவரோகணம் கயிறுகளை கொண்டு 7 திசைகளையும் கட்டிப் போடுகின்ற வல்லமை மிக்கவன் .

மீட்டாத சுரம் இல்லை  இசையில்
பெறாத வரம் இல்லை.
இவன் உடலெங்கும் 
சித்தர் மணம் வீசும் 
அத்தர் மனம் கொண்டவன்.

தன் பா எல்லாம்
வெண்பா செய்தான்.அதையும்
அன்பா செய்தான் .

இசைக்காக பிறப்பு எடுத்தவன் .
இசை காரியத்தை யாத்தவன்.

திவ்ய பிரபந்தம் படித்தது போல 
பிரபத்தி செய்து 
தரு முத்தி கோருகிறார் இழையராஜா.

அருணாச்சல அக்ஷர மணமாலை 
ரமண மகரிஷி அக்ஷரமணமாலை படிக்கும்பொழுது என்னையே நான் மறந்து போகிறேன்.

தூத்துக்குடி கடலில் மூழ்கி நல்லமுத்து எடுத்து கொடு என்றால் எத்தனை கொடுப்பேன் எல்லாமே நல்லமுத்து தான்.

ஆப்பிரிக்கா சுரங்கத்தில் சென்று நல்ல வைரம் எடுத்துக்கொண்டு வா என்றால் அங்கு கிடைப்பதெல்லாம் கோகினூர் வைரம் போல இந்த வீணை நரம்பில் எல்லாமே கோகினூர் ராகங்கள் தான் இந்த வீணை நரம்பின் இருந்து நல்ல சுரம் எது என்று கேட்டால் எல்லா வரிகளுமே நல்ல சுகம் தான்.

வாசிக்கவும் நேசிக்கவும் 
வாசிக்கவும் யோசிக்கவும் 
உதவும் என் நரம்பு வீணை.

நன்றி :
திரு கருணா மூர்த்தி 
மற்றும் 
முகநூல்

கருத்துகள் இல்லை: