5 ஆக., 2023

சிறுநீர் சிகிச்சை

🏵🏵🏵🏵

*சிறுநீர்சிகிச்சை குழு அன்பர்களுக்கு வணக்கம்.*

*எனது பெயர் புவனேஸ்வரி. RMR இராஜசேகரன் அவர்களின் மகள். கல்லூரியில் விலங்கியல் துறை பேராசிரியராக பணிபுரிந்து வருகிறேன்.*

*எனது தந்தையின் மூலமாக சிறுவயது முதலே எங்களுக்கு சிறுநீர் சிகிச்சையைப் பற்றி நன்கறிந்து கொண்டு நாங்களும் சிறுநீர் சிகிச்சையை பின்பற்றி நல்ல பலனைப் பெற்றோம்*

*1999 ல் என் 23 வயதில் திருமணம் நடைபெற்றது. 2000 ல் எனக்கு மகன் பிறந்தான். அவனுடைய சிறுவயதில் ஏற்பட்ட உடல் உபாதைகளுக்கு சிறுநீர் சிகிச்சையை பயன்படுத்தியதில் நன்றாக குணம் பெற்றான்.*

*இம் முறையால் ஜுரம், சளி, மஞ்சள் காமாலை, அலர்ஜி, அம்மை மற்றும் அவனுடைய நெஞ்சிலிருந்து கைமுழுவதும் ஏற்பட்ட தீவிர தீக்காயத்திற்கும் மேல் பூச்சாக சிறுநீரை பயன்படுத்தி 15 தினங்களில் நிறமும் மாறி எவ்வித பாதிப்பின்றி பூரண குணம் பெற்றான்*

*இது எனக்கு மிகவும் ஆச்சர்யமாகவும், அதிசயமாகவும் இருப்பதை கண்டு வியந்தேன். இவை எப்படி சாத்தியம் நாம் ஏன் சிறுநீரைப்பற்றி ஆராய்ச்சி மேற் கொள்ளக் கூடாது என்று எண்ணினேன்.*

*என் 30 வது வயதில் M.Sc Microbiology (Regular) ல் தஞ்சாவூர் பூண்டி கல்லூரியில் பயின்றேன். அப்போது என்னுடைய ஆராய்ச்சி படிப்பில் சிறுநீரீன் மருத்துவ குணத்தை நீரூபிப்பதை மையமாக எடுத்துக் கொண்டேன்*.

*அதற்காக தோல் நோயாளர்களை தேர்வு செய்தேன். (Candidiasis) தோலில் ஏற்படும் பூஞ்சைத் தொற்று, அரிப்பு சோரியாஸிஸ் போன்ற பத்து நோயாளர்களை தேர்வு செய்து அவர்களின் பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து தோல் மாதிரிகளை தனித்தனியாக Saline water ல் சேகரித்து மேலும் ஒவ்வொருவரின் சிறுநீரையும் தனித்தனியாகவும் பெற்றுக்கொண்டேன்.*.

*பொதுவாக ஆங்கில மருத்துவத்தில் நோய்க்கு மருந்துகள் சோதனை செய்ய Invitro, Invivo என்ற இருமுறைகள் வழக்கத்தில் உள்ளன.*

*Invitro முறை: சோதனை முறையில் நோயாளரின் நோய் நுண்ணுயிரிகளை ஒரு மீடியத்தில் வளர்த்து (Culture test) அவற்றில் எந்த மருந்திற்கு நுண்ணுயிரிகள் கட்டுப்படுகின்றன என்பதை அறியும் முறைக்கு Invitro எனப்படும்*

*Invivo முறை : மருந்தாக கருதும் பொருளை நேரடியாக மனித உடலிலோ அல்லது  விலங்குகளிடமோ செலுத்தி, அம்மருந்து எவ்வாறு செயல்படுகிறது என்பதையறிந்து, மருந்துகளை கண்டுபிடிக்கும் முறை Invivo எனப்படும்*

*நோயாளர்களிடத்தில் சேகரித்த தோல் (நுண்ணுயிரி) மற்றும் சிறுநீர் மாதிரிகளை ஆய்வுக்கூடத்தில் (Lab) ஆய்வை மேற்கொண்டேன். முதலில் Invitro முறையில் Culture மீடியத்தில் நுண்ணியிரிகளை வளர்த்தேன்.*

*நுண்ணுயிரிகள் வளர்ந்த அந்த கல்ச்சர் மீடியத்தில் சிறுநீரை மருந்தாக உபயோகித்தேன். ஆனால்                     நுண்ணுயிரிகள் கட்டுப்படவில்லை. மாறாக நன்றாக வளர்ந்தது.*

*இம்முடிவு எனக்கு அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது. காரணம் சிறுநீர் அனைத்து நோய்களுக்கும் மருந்தாக பயன்படுவதால் நோய் நுண்ணியிரிகளை கட்டுப்படுத்தாமல் மாறாக பல்கி பெருகுவதற்கு காரணம் என்ன?*

*ஆய்வக தலைமை பொறுப்பாளர் கூறிய தகவல் எனக்கு அதிர்ச்சியளித்தது. முன்பெல்லாம் நுண்ணுயிரிகளை வளர்ப்பதற்கு சிறுநீரை Culture மீடியமாக உபயோகப்படுத்தினர். எனவே உங்கள் ஆய்வில் நீங்கள் எதிர்பார்த்தபடி நுண்ணியிரிகள் சிறுநீரில் கட்டுப்படாமல் மாறாக நன்றாக வளர்ச்சிதான் அடையும் என்று விளக்கமளித்தார்*

*அடுத்து தோல் மாதிரிகளை சேகரித்த நோயாளர்களை நேரில் சந்தித்து தோல் நோய்களுக்கு சிறுநீர் சிறந்த மருந்தென விளக்கமளித்து பாதித்த இடங்களில் சிறுநீரை தினமும் பூசுங்கள் என்று விளக்கி சிறுநீர்சிகிச்சை புத்தங்களை கொடுத்து அடுத்து ஒருவாரம் சென்றபின் வருகிறேன் எனக்கூறி விடை பெற்றேன்*

*ஒருவாரம் சென்றபின் அவர்களை சந்தித்த போது அவர்கள் முகமலர்ச்சியுடன் வரவேற்றனர். நோய்களில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருந்ததை நானும் கவனித்தேன் நோயாளர்களும் சிகிச்சையை தொடர்ந்து செய்வோமென உறுதியளித்தனர்.*

*இந்த ஆய்வில் நான் அறிந்த சில கருத்துக்களை உங்களிடம் பகிர்கிறேன். சிறுநீர் நேரடியாக எந்த நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றலை பெறவில்லை. உடலில் மாலிஸ் மூலமாகவும் அருந்துவதின் மூலமாகவும் நம் நோய் எதிர்ப்பாற்றலை தூண்டி நோய்களை குணப்படுத்தும் ஆற்றலை பெற்றிருக்கிறது என்பதே  ஆய்வில் நான் கண்ட அறிவியல் உண்மை.*

*ஆய்வை பற்றிய விளக்கங்கள் தேவைப்பட்டால் குரூப்பில் பதிவு செய்யவும் என்னால் இயன்றவரை விளக்குகிறேன்.*

வாட்ஸ்அப் சிறுநீர் சிகிச்சைக் 
குழுவிலிருந்து ஒரு பதிவு

கருத்துகள் இல்லை: