"பிரியா".சுஜாதா எழுதியது .கிழக்கு பதிப்பகம் வெளியீடு .விலை ரூபாய் 125/- முதல் பதிப்பு 2010 .
மொத்த பக்கங்கள் 262.
*"*"
தமிழில் முக்கியத்துவம் வாய்ந்த நாவல்கள் வரிசை 4
சுமார் 45 ஆண்டுகளுக்கு முன் படித்தது; மீண்டும் இப்பொழுது படித்தேன் .அதே சுவை ;அதே மகிழ்ச்சி படிக்கும்பொழுது.
ஒருவனுக்கு தன் பதினைந்தாம் அகவைக்குள் ஏற்படுகின்ற தாக்கம் ,ஆக்கம், ஊக்கம் ,அறிவு ,அனுபவம் எல்லாமே தான் பிற்காலத்தில் அவன் எழுதுகின்ற கதைகளுக்கு அடித்தளமாக இருக்கும் .அதுவே பின்னிப்பிணைந்து ஒவ்வொரு நூலாக வெளிப்படும் என்று எங்கோ படித்திருக்கிறேன் .ஆனால் அந்த பதினைந்தாம் வயதில் சுஜாதா அவர்கள் பெற்ற அனுபவங்கள் கோடிக்கணக்காக இருக்குமோ என்று ஐயம் வருகிறது
எனக்கு.
குமுதத்தில் எழுதிய தொடர்கதை . சினிமா படமாகவும் எடுக்கப்பட்டது .ஒரு சினிமா நடிகை படப்பிடிப்புக்காக லண்டன் செல்கிறார் .அவருடன் அவள் காதலும் போகிறான் என்று தெரிந்துகொண்ட அவளது கண்டிப்பான கார்டியன் லாயர் கணேஷை கண்காணிக்க உடன் அனுப்புகிறார் .லண்டனில் சதி கொலை கடத்தல் என அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகளில் சிக்கி திக்குமுக்காடும் கணேஷ் ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் உடன் இணைந்து மிரட்டும் அசத்தலான நாவல் இது.
இடையில் எஸ்ஏபி அவர்களால் திருத்தம் செய்யப்பட்டு புத்தாக்கமபட்ட கதை இது. இந்த கதை எழுதுவதற்காகவே குமுதம் ஆசிரியர் எஸ் ஏ பி அவர்கள் சுஜாதா அவர்களை இலண்டனுக்கு அனுப்பி வைக்கிறார் .அதைப் பார்த்துதான் இதயம் பேசுகிறது மணியன் அவர்களும் சில ஆசிரியைகளை சில கட்டுரைக்காக பயணம் அனுப்பியதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.
இந்த ஒரு பிரியா புத்தகத்தை ஒரு முறையோ இரு முறையோ படித்துவிட்டு அதன் கதை சுருக்கத்தையும் அல்லது அதை சுவைத்த விதம் குறித்தும் எழுதுவதற்கு நிறைய யோசிக்க நிறைய காலம் எடுத்துக் கொள்கிறேன் .ஆனால் சுஜாதா அவர்கள் தனது கடுமையான பணிகளுக்கு இடையே ஓய்வு ஒழிச்சலின்றி ஒரு நாளைக்கு 200 பக்கங்களுக்கு குறையாமல் எழுதிக்கொண்டிருந்தார் என்றால் நம்ப முடியாத ஆச்சரியம் படத்தக்க மனிதர்; அபூர்வ மனிதர் அவர் .
Really HE is a Legend..
நானும் கூட பத்தாண்டுகளுக்கு முன் லண்டன் சென்று இருக்கிறேன் .நான் கண்டதையும் கேட்டதையும் பார்த்ததையும் அவரது எழுத்துக்களால் உயிர்த்துடிப்போடு 45 ஆண்டுகளுக்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரே பதிவு செய்திருக்கிறார் .நம்மால் பார்க்க முடியும் ;கேட்கத்தான் முடியும்; எழுத்துக்களால் வடிக்க முடியாதல்லவா..
டாக்டர் மு வரதராஜன் அவர்களை தெளிவான எளிமையான எழுத்துக்களை படித்துவிட்டு தி. ஜா.அவர்களின் வசீகரமான மொழிக்குள் நுழைந்து ஜெயகாந்தன் அவர்களின் கம்பீரமான வார்த்தை பிரயோகம்களுக்குள் சந்தோஷத்தை அனுபவித்து விட்டு வரும்போது தான் இவரின் எல்லாம் கலந்த கலவையில் அதிர்ச்சியூட்டும் இளமை துடிப்பான வசீகர வர்ண எழுத்துக்களால் கலங்கடிக்கப்பட்டேன் ஒரு காலத்தில் நான்.
****"""
சுஜாதா (மே 3, 1935 – பெப்ரவரி 27, 2008) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார். இயற்பெயர் ரங்கராஜன். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் பல வாசகர்களை கவர்ந்துள்ளார். சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. இவர் சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் எனப் பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர்
சென்னை குரோம்பேட்டை எம்.ஐ.டி.யில் பி.இ. (மின்னணுவியல்) கற்றார். திருச்சி புனித ஜோசப் கல்லூரியில், அப்துல் கலாம், சுஜாதா இருவரும் ஒரே வகுப்பில் படித்தார்கள்.
அதன் பின்னர் நடுவண் அரசுப் பணியில் சேர்ந்தார். டெல்லியில் முதலில் பணியாற்றினார். 14 ஆண்டுகள், அரசுப் பணியில் இருந்த சுஜாதா, பின்னர் பெங்களூர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இணைந்தார். அங்கு ரேடார்கள் குறித்த ஆய்வுப் பிரிவிலும், மேலும் பல்வேறு பொறுப்புகளிலும் பணியாற்றினார். பின்னர் பொது மேலாளராக உயர்ந்தார். பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் சென்னைக்குத் திரும்பினார்.
அறிவியலை, ஊடகம் மூலமாக, மக்களிடம் கொண்டு சென்றதற்காக, அவரைப் பாராட்டி, 'தேசிய அறிவியல் தொழில்நுட்பக் கழகம்' அவருக்கு 1993ம் ஆண்டு விருது வழங்கிக் கெளரவித்தது.
மின்னணு வாக்குப் பதிவுப் பொறியை உருவாக்க முக்கியக் காரணமாக இவர் இருந்தார். இதை உருவாக்கிய பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் முக்கிய உறுப்பினராக இருந்தார் சுஜாதா.
இப்பொறியை உருவாக்கியதற்காக அவருக்கு வாஸ்விக் விருது வழங்கப்பட்டது.
சுஜாதாவின் எழுத்துப் பணியைப் பாராட்டி, அவருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதும் வழங்கப்பட்டுள்ளது.
தன் மனைவி பெயரான, 'சுஜாதா'வைத், தன் புனைபெயராக வைத்துக் கொண்டார். கணையாழி இதழில் கடைசிப் பக்கங்கள் எனும் கட்டுரைத் தொடரை ஸ்ரீரங்கம் எஸ். ஆர் எனும் பெயரிலும் எழுதி வந்தார்.
சுஜாதா இலக்கியம், நாட்டார் வழக்காறு, தமிழ்ச் செவ்விலக்கியம், துப்பறியும் கதை, அறிவியல் கதை, சிறுகதை, புதினம், குறும் புதினம், நாடகம், திரைப்படம், கணிப்பொறியியல், இசை என்று பல பாணிகளிலும் வகைகளிலும் எழுதியுள்ளார். புதினங்கள், சிறுகதைகள், நாடகங்கள், தொகை நூல்கள் என இருநூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். ஒரு கவிதைத் தொகுப்பும்
எழுதி உள்ளார்.
இவரின் கற்றதும் பெற்றதும் ஆழ்வார்கள்,ஆன்மீக புத்தகங்கள் எல்லாம் எனக்கு மிகப் பிடிக்கும்.
*****"*
இனி பிரியா கதை பார்ப்போம் .
பன்ரொட்டி போல புஷ்டியான நடிகை பிரியா .ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் நடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாள். அவளை இரண்டாம் தாரமாக மணந்து கொண்ட ஜனார்த்தனன் அவள் மீது சந்தேகம் கொண்டு இருக்கிறான். பரத் நடிகரோடு அவளுக்கு தொடர்பு ஏற்படுகிறது .லண்டனுக்கு அவள் செல்ல ஆயத்தமாக படப்பிடிப்புக்காக அவளை கண்காணிப்பதற்காக அங்கு சென்று அவள் படப்பிடிப்பு தடைபடாமல் நடைபெற லாயர் கணேஷ் ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார் ஜனார்த்தனன். கணேஷ் செல்கிறான் ; படப்பிடிப்பு ஒருவழியாக முடிந்து ஓரிரு காட்சிகள் எடுக்கப்பட வேண்டிய நிலையில் மழை காரணமாக நின்றுவிடுகிறது. ஜனாவை வரச்சொல்லி தந்தி அனுப்புகிறான் கணேஷ் ;அவனும் வருகிறான் .இந்த நிலையில் பிரியா கடத்தப்படுகிறார் ஸ்காட்லாந்து போலீஸ் உதவியை நாடுகிறான்.
உண்மையில் ஷா ஜனார்த்தனன் இருவரும் பிரியாவை கடத்தி அவளிடம் சில கையொப்பம் பெற முயல்கிறார்கள். கடத்தல் நாடகம் போலீசுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக டெலிபோன் மூலம் நாடகமாடுகிறார்கள் .இதற்கிடையில் ஷாவிடம் இருந்து ஜனார்த்தனத்திடம் இருந்தும் பிரியா தப்பித்து விடுகிறாள். கொலை செய்யப்பட்டதாக பிரேதம் கைப்பற்றுகிறது போலீஸ் .
அவர்கள் இருவரையும் விசாரிக்க , கொல்லவில்லை என்று சொல்கிறார்கள். அப்படி என்றால் கொன்றது யார் என்று கேள்வி கணேஷ் மனதை அலைக்கழிக்கிறது.
*மதாம் துஸ்தாத் *,மெழுகுச் சிலை கூடம். அந்த இடத்தை குறித்து சொல்லிவிட்டு ஒரு புதிய திருப்பத்தை சுஜாதா ஏற்படுத்தியிருக்கிறார் .
மெழுகு சிலைகளோடு என் தங்கச் சிலையை வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்ட இடம் நினைவுக்கு வந்தது.
வழுவாமல் பழுவேட்டரையரைப் புகுத்தியிருக்கிறார் சுஜாதா . பொன்னியின் செல்வன் தாக்கம் நிஜமாகவே தெரிகிறது
இறுதியில் இந்திய முறைதான் பிரியாவை கண்டுபிடித்தது .அவளின் பரதநாட்டியக் கண்தான் சைகை செய்து பெட்ரோல் பங்கு ஊழியனுக்கு விபரம் சொல்லி ஸ்காட்லான்ட் யார்ட் காவல்துறைக்கு தகவல் அளிக்க விடுபடுகிறார்கள் எல்லோரும்.
****"
முதலில் எனது மத்திம வயதில் இந்த கதையை படிக்கும்போது த்ரில்லிங்காக இன்டர்ஸ்டிங் ஆக இருந்தது ஆனால் இப்போது இந்த முதிய வயதில் மீண்டும் படிக்கும் பொழுது எனக்கு தமிழ்வாணன் எழுதிய சங்கர்லால் துப்பறியும் கதையை படிப்பது போல அதுதான் மழைக்காடுகளில் சுவைத்துக் கொண்டே நடந்து செல்வதைப் போல இருக்கிறது.
ஒரு முக்கியமான கட்டத்தில் இந்தக் கதையை திசை திருப்பிய எஸ்ஏபி அவர்களுக்கு நன்றி என்று சுஜாதா அவர்கள் குறிப்பிடுவார் .
கதையை முழுமையாக படித்து முடித்து விட்டேன் .எந்த இடத்தில் எந்த இடத்தில் அந்த திருப்பம் செய்யப்பட்டது இன்று எனக்கு புரியவில்லை .அதற்காக மூளையை நான் காசக்கிக் கொள்ளவுமில்லை .தெரிந்தவர்கள் சொல்லலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக