7 நவ., 2023

நூல் நயம்

எவ்வளவோ பணிச் சுமைகளுக்கு இடையிலும் அவர் ஓயாது படித்து வந்தார். பல நூல்களை எழுதியுள்ளார். நேரு அவர்களின் சுய சரிதையை குஜராத்தியில் மொழி பெயர்த்துள்ளார். 

கீதைக்கு அவர் எழுதிய உரை மிகச் சிறந்தது.

மகாதேவ தேசாய் சிதைக்கு மகாத்மா எரியூட்டினார். 
"மகாதேவ் ஐம்பது வயதுக்குள் நூறாண்டு வேலைகளைச் செய்து முடித்தான். ஆகையால், களைப்பாறப் போயிருக்கிறான்." - மகாத்மா.

தேசாயின் பெரும் பணி காந்திஜீயின் சொற்களையும் செயல்களையும் அவ்வப்போது எழுத்துருவில் மாற்றியதுதான். ஒவ்வொரு நாளும் நடப்பவற்றை அன்றே நாட்குறிப்பில் எழுதி விடுவார். மகாத்மா குஜராத்தியிலோ, ஹிந்தியிலோ கூட்டத்தில் உரையாற்றுவதை பத்திரிக்கைகளுக்கு கொடுப்பதற்காக உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டு வருவார்.உரை முடியும் போது அவரும் எழுதி முடித்து விடுவார். மகாத்மாவின் சிந்தனை ஓட்டம் மட்டுமல்ல, காந்தி பயன் படுத்தும் ஒவ்வொரு வார்த்தையும் அவருக்கு அத்துப்படி.

தேசாய் போல ஒரு நல்ல தொண்டனை, காரியதரிசியை எங்கே தேடுவது. அது சரி, அதற்கு முதலில் காந்தி போன்ற ஒரு தலைவர் வேண்டுமே!

கடும் உழைப்பாளியாக, எண்ணம், சொல், செயல் எல்லாவற்றிலும் காந்தியின் மற்றொரு வார்ப்பாக, காந்தியின்  கைகளால் கொள்ளியிடப்படும் பேறு பெற்றவராக, தனக்காக தனியாக ஒரு முகமற்றவராக வாழ்ந்து மறைந்த மகாதேவ தேசாய் அவர்களின் வாழ்க்கையை படிக்கும் போது கண்கள் பனிக்கின்றன.

நன்றி : நெல்லையப்பன் 

கருத்துகள் இல்லை: