2 நவ., 2023

நூல் நயம்

" பெருந்தொற்று"
 அல்பெர் கமுய் (பிரென்சு )
தமிழில் - சு ஆ வெங்கட சுப்புராய நாயகர்
காலச்சுவடு பதிப்பகம் வெளியீடு
விலை ரூபாய் 450/-

# இது ஒரு கட்டுரை புத்தகம்.

ஆசிரியர் குறிப்பு மற்றும் மொழியாக்கம் செய்த ஆசிரியர் குறிப்பு.

அல்பெர் கமுய் 
        இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற பிரெஞ்சு இலக்கியவாதியாக திகழ்ந்தவர். பிரெஞ்சு காலணிகளில் ஒன்றான அல்ஜீரியாவில் பிறந்தவர். உலகப் போரின் பெயரில் நடந்த படுகொலைகளை கண்டு வெகுண்டு எழுந்த கமுய், மனித இனத்தின் பொருளற்ற தன்மையினை தத்துவ விசாரணைக்கு உட்படுத்தினார். அதன் விளைவாக "அபத்தநிலை" என்னும் புதிய கோட்பாட்டினை அறிமுகம் செய்தார். அக்கோட்பாட்டின் படி பல  புதினங்களையும், கட்டுரைகளையும் படைத்துள்ளார். அத்தகைய நூல்களில் ஒன்றான "பெருந்தொற்று"1947 ஆம் ஆண்டு வெளியானது. இவர் இலக்கியத்திற்கான நோபல் பரிசினை 1957 பெற்றுள்ளார்.. 

     சு .ஆ. வெங்கடசுப்புராய நாயகர்
                    பிரெஞ்சு , தமிழ்,  ஆங்கில மொழிகளுக்கிடையே மொழிபாலம் அமைத்து வருபவர். கடந்த 33 ஆண்டுகளாக புதுச்சேரியில்  பிரெஞ்சு பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இதுவரை 9 புதினங்களை பிரெஞ்சில் இருந்து நேரடியாக தமிழாக்கம் செய்துள்ளார். சங்க இலக்கிய செல்வங்களான குறுந்தொகை ஐங்குறுநூறு ஆகியவற்றை  பிரஞ்சு மொழியாக்கம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

          இவரின் தமிழ் மொழியாக்கத்தில் இல்லறவாசிகள், சூறாவளி, வீழ்ச்சி, ஃபுக்கோஷிமா ஒரு பேரழிவின் கதை, வாழ்வு… இறப்பு… வாழ்வு…, ஆன்டன் செகாவ் ஆகச் சிறந்த கதைகள், பெருந்தொற்று சிறப்பானவை.

       எனக்கு இன்னும் பசுமையாக நினைவுக்கு இருக்கிறது.

       விதி வந்தால் போவோம் .அதுவரை சாதிப்போம் என்று எனது தாயார் அடிக்கடி சொல்வார்கள்.
    ஏன் அப்படி சொன்னார்கள் என்றால் அந்த காலத்தில் காலரா இருந்தது .ஊர் எங்கும் வீடு எங்கும் தெருவெங்கும் வீடு எங்கும் காலரா மறைந்து நிறைந்து கிடந்தது .
       எனது அம்மா அப்படி இருந்து வீட்டிலேயே வயதான கிழவி ஒருத்தி இருந்தாள் .அவரது பிள்ளைகள் எல்லாம் விட்டு ஓடி விட்டார்கள் கிழவியை கண்டும் காணாமல் .
       காரணம் அவருக்கு காரணம் தொற்று தென்பட ஆரம்பித்தது .இந்த நிலையில் எனது தாய் ஒருத்தியே, அவரது வயது அப்பொழுது 13 தான் இருக்கும் ,திருமணமான புதிது , பிள்ளைகள் எல்லாம் கைவிட்டு ஓடிவிட்ட நிலையில் ஏன் ஊர் உலகமே அந்த குடியாத்தம் நகரை விட்டு ஓடி விட்டு நிலையில் எனது தாய் மட்டும் அந்த முதியவருக்கு சிகிச்சையை அளித்து காப்பாற்றி இருக்கிறார் .அதற்காக வேண்டி தான் அப்படி சொல்வார்.
        எந்த தொற்று வந்தாலும் சரி யாருக்கு விதி முடிகிறதோ அவருக்குத்தான்  தொற்று பற்றிக்கொள்ளும் என்று.

         எனது பிள்ளைகள் இருவருக்கும் சின்னம்மை போட்டு உடல் முழுக்க இல்லாத இடமே இல்லை என்று சொல்லுகின்ற அளவிலே சின்னமை தாக்கியது .எனது தாயாரின் பொன்மொழி தான் அவர்களை காப்பாற்றியது ;எங்களை காப்பாற்றியது..

மூன்று வருடங்களுக்கு முன் கொரானா நம்மை படுத்திய பாடு எல்லோரும் அறிவோம் .இன்றைய generation சந்ததியார் கொரோனா பெருந்தொற்று கண்டு வியந்து இருப்பார்கள் வியந்து . 

         நோய்களை சமாளித்து விடலாம் .நோய்களை குணப்படுத்தி விடலாம். ஆனால் நோயாளிகளை சமாளிப்பது எவ்வளவு கடினம் என்பதை இந்த ஒரு சில மாதங்களில் நான் அனுபவித்து வருகிறேன் அனுபவித்து.

"போரால் உயிரிழந்தவர்களைவிட நோயால் உயிரிழந்தவர்கள்தான் அதிகம்" அதுவும் பயத்தால் அச்சத்தால் பரிதவிப்பால் திக்கற்ற நிலை எண்ணி எண்ணி இறந்தவர்கள் தான் அதிகம்.

     நோயால் உயிர் இழந்தவர்கள் அதிகம் என்று சொன்னது அதன் காரணம் பூமியே கிருமிகளின் ஆட்சியின் கீழ் தான், ஆதி முதல் அந்தம் வரை,அன்று  முதல் இன்று வரை இருக்கிறது என்பதை விஞ்ஞானிகள் ஒப்புக் கொள்வார்கள் ;நான் அடித்து கூறுவேன்.

     . நம் கண்ணில்படாத கொடூர கிருமிகளான  பிளேக், காலரா, ஃப்ளு, கொரோனா போன்ற கொடூர நோய்களால்  உயிரிழந்தவர் ஏராளம். 

    இந்த தொற்றுநோய் விருந்தோற்று, பெரும் தொற்று குறித்து நான் பேசுவதற்கு பதிலாக நீங்களே புத்தகத்தை வாங்கி வாசித்து பார்த்தால் அதன் உண்மை தன்மை பெருந்தன்மை சிறப்பு எல்லாம் அறியலாம்.

     மருத்துவர் பெர்நார் ரியே, லிஃப்ட்லிருந்து வெளியேறி வரும் போது ஒரு செத்த எலியைக் கடந்து வருகிறார் . அதிலிருந்து கதை .

அல்ஜீரியக் கடற்கரை ஓரான்  நகரின் மக்கள் தொகையில் பாதிப் பேரைக் கொன்றழித்த பிளேக் என்னும் நுண்கிருமியைப் பற்றிய இந்நூல் 1947-ல்  வெளியானது.

     எலிகளிடமிருந்து பெருந்தொற்று பரவி,  பீதி உருவானது.

டாக்டர் ரியே அவர்களின் தன்னலமற்ற உழைப்பு ஓய்வு ஒழிப்பில் இல்லாத நோய்களில் நோயிருக்கும் பணியில் ஈடுபட்டு இருப்பது மிகவும் பாராட்டுக்குரியதாக இருந்தது.

ஆனால் மருத்துவரின் அறிவுரையை
மக்கள் சட்டை செய்யவில்லை .உயிர் பயம் அவர்களுக்கு சிறிதும் இல்லை.

என் அம்மா போல.

   அது

நுண்ணுயிர் இறப்பதில்லை . எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறை போல் மறை
போல்.
 நுண்ணுயிர் பத்து ஆண்டுகளுக்கு மேலாகவும் காத்திருக்கும்" எப்போது வேண்டுமானாலும் மீண்டும் வரலாம். எதிர் கொள்ள தயாராய் நாம் இருக்க‌ வேண்டும்.

நன்றி :

கருத்துகள் இல்லை: