மண்ணில் ஊன்றி
எழுந்து நிற்கும்
விதையாய்
மரம்.
மரத்தை வெட்டினால்
வளையமாகத் தெரிவது
மரத்தின் வயது அல்ல
அது
மனிதனின் செயலுக்காக
மரம் போட்டு வைத்த
மதிப்பெண்.
நியூட்டனுக்கு
ஆப்பிள் மரம்.
புத்தருக்கு
போதி மரம்.
திருமூலருக்கு
அரச மரம்.
நம்மாழ்வாருக்கு
புளிய மரம்.
மாணிக்கவாசகருக்கு
குருந்த மரம்.
ஒவ்வொரு மரமும்
எந்த ஞானிக்காக
காத்திருக்கிறதோ?
நன்றி: மகரந்தன் & "இனிய உதயம்", இலக்கிய மாத இதழ் (மே 2009).
1 கருத்து:
மகரந்தன் என்று எனது பெயரைப் போட்டிருக்கிறீர்கள். இது நான் எழுதியது அல்ல.
எனது படைப்புகளைக் கண்டு பின்னர் எழுதுங்கள்.
வாசிக்க : http://vallinammaharandan.blogspot.com
கருத்துரையிடுக