17 செப்., 2012

வரலாற்றில் சில மைல் கற்கள்-4: செப்டம்பர் பதினாறாம் நாள்

வரலாற்றில் சில மைல் கற்கள்-4: செப்டம்பர் பதினாறாம் நாள்

இன்று செப்டம்பர் 16ம் நாள். இந்த வருடத்தினுடைய 259ம் நாள். இந்த ஆண்டில் இன்னும் 106 நாட்கள் பாக்கி இருக்கின்றன.

1620ம் ஆண்டு இந்த நாளில்தான் அமெரிக்க வரலாற்றில் முக்கிய இடம் பிடித்துள்ள மே ஃப்ளவர் (Mayflower) என்ற கப்பல் வட அமெரிக்காவிற்காக பயணம் துவங்கியது. ஆங்கிலேயரும் மற்ற ஐரோப்பியரும் அமெரிக்காவில் குடிபுகுந்து, பின்னர் அமெரிக்க நாடு உருவானதின் முதல் படி இது. மேலும் அறிய:
http://en.wikipedia.org/wiki/Mayflower


1812ல் இந்த நாளில் நள்ளிரவுக்குப் பிறகு துவங்கிய தீ, மாஸ்கோ நகரின் நான்கில் மூன்று பங்கை அழித்தல்.
மேலும் அறிய:
http://en.wikipedia.org/wiki/Fire_of_Moscow_(1812)


1908ல் இந்த நாளில் தற்போதைய மல்டிநேஷனல் நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் நிறுவப்பட்டது. மேலும் அறிய:
http://en.wikipedia.org/wiki/General_Motors_Corporation

1920ல் இந்த நாளில் புகழ்பெற்ற வால் ஸ்டிரீட்டில் ஒரு குதிரை வண்டியில் வைக்கப்பட்ட வெடிகுண்டு ஜெ.பி.மார்கன் கட்டிடத்திற்கு முன் வெடித்து, அதில் 38 பேர் கொல்லப்பட்டனர், 400 பேர் காயமடைந்தனர். மேலும் அறிய:
http://en.wikipedia.org/wiki/Wall_Street_bombing

1943ம் ஆண்டில் இந்த நாளில் நேசப் படைகள், இரண்டாம் உலகப்போரின் ஒரு பகுதியாக, இத்தாலியப் படையெடுப்பை வெற்றிகரமாக முடித்தல்.
http://en.wikipedia.org/wiki/Allied_invasion_of_Italy

1945ம் ஆண்டில் இரண்டாம் உலகப் போரின் ஒரு பகுதியாக, இந்த நாளில் ஜப்பானியப் படைகள் ஹாங்காங்கில் சரணடைதல்.


1947ம் ஆண்டில் இந்த நாளில் கத்லீன் புயல் சைத்தாமா, டோக்கியோ மற்றும் டோன் ஆறு பகுதிகளைத் தாக்கி, அதன் விளைவாக 1930 பேர் கொல்லப்படுதல்

1955ம் ஆண்டு இந்த நாளில் அர்ஜெண்டினாவின் ஆட்சியாளர் ஜுவான் பெரான் ஆட்சியிலிருந்து நீக்கப்படுதல்.  ஜுவான் பெரான் பற்றி மேலும் அறிய:
http://en.wikipedia.org/wiki/Juan_Per%C3%B3n

1955ம் ஆண்டு இந்த நாளில் சோவியத் ரஷியாவின் நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து முதன்முறையாக நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவுகணை ஏவப்பட்டது.

1959ல் இந்த நாளில் நியூயார்க் நகரில் டெலிவிஷனில் முதன்முறையாக ஒரு போட்டோகாபியர் செயல்படுத்திக் காட்டப்பட்டது. இந்த மாடல் இயந்திரம் ஜெராக்ஸ் 914 என்ற வகையைச் சேர்ந்தது.  இந்த உலகின் முதல் செராக்ஸ் இயந்திரம் பற்றி மேலும் அறிய:
http://en.wikipedia.org/wiki/Xerox_914

1963ம் ஆண்டில் இந்த நாளில் மலேஷியா என்ற புதிய நாடு உருவாதல். மலேயா, சிங்கப்பூர், பிரிட்டிஷ் வடக்கு போர்னியோ (சபா) மற்றும் சரவாக் தீவுகளின் கூட்டமைப்பிலிருந்து இந்த புதிய நாடு உருவாக்கப்படல். ஆனால் இதிலிருந்து சிங்க்கப்பூர் விரைவில் வெளியேறி, தனி நாடானது.  மலேஷியா பற்றி மேலும் அறிய:
http://en.wikipedia.org/wiki/Malaysia

1975ல் இந்த நாளில் பப்புவா நியூகினி ஆஸ்திரேலியாவிலிருந்து விடுதலை பெறல்.

1978ல் இந்த நாளில் ரிஸ்டர் ஸ்கேலில் 7.5 முதல் 7.9 அளவு கொண்ட ஒரு கடுமையான நில நடுக்கம் ஈரானின் தபாஸ் பகுதியில் 25000 பேர் இறக்கக் காரணமாகிறது.

1987ல் இந்த நாளில் ஒசோன் படுகையைக் காப்பதற்கான மான்ட்ரீல் ஒப்பந்தம் கையெழுத்தானது.  இந்த மான்ட்ரீல் ஒப்பந்தம் பற்றி மேலும் அறிய:
http://en.wikipedia.org/wiki/Montreal_Protocol

1386ல் இந்த நாளில் இங்கிலாந்தின் அரசர் ஐந்தாம் ஹென்றி பிறந்தார். அவரைப் பற்றி மேலும் அறிய:
http://en.wikipedia.org/wiki/Henry_V_of_England

1507ல் இந்த நாளில் சீனப் பேரரசர் ஜியாஜிங் பிறந்தார். அவரைப் பற்றி மேலும் அறிய:
http://en.wikipedia.org/wiki/Jiajing

1916ல் இந்த நாளில் புகழ்பெற்ற இந்தியப் பாடகர் திருமதி எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி பிறந்தார். அவரைப் பற்றி தமிழில்:
http://ta.wikipedia.org/wiki/ம._ச._சுப்புலட்சுமி



1923ல் இந்த நாளில் சிங்கப்பூரின் முதல் பிரதமரான புகழ்பெற்ற லீ க்வான் யூ பிறந்தார். அவரைப் பற்றி மேலும் அறிய - தமிழில்:



1087ல் இந்த நாளில் போப்பாண்டவர் ஐந்தாம் விக்டர் மறைந்த நாள். மேலும் அறிய:
http://en.wikipedia.org/wiki/Pope_Victor_III

1380ல் இந்த நாளில் பிரஞ்சுப் பேரரசர் ஐந்தாம் சார்லஸ் மறைந்தார். மேலும் அறிய:
http://en.wikipedia.org/wiki/Charles_V_of_France

1824ல் இந்த நாளில் பிரஞ்சுப் பேரரசர் பதினெட்டாம் லூயி மறைந்தார். மேலும் அறிய:
http://en.wikipedia.org/wiki/Louis_XVIII_of_France

இந்த நாள் செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் தீவுகளில் மாமனிதர்கள் தினமாகக் கொண்டாடப் படுகிறது.  அந்த நாட்டின் முன்னேற்றத்திற்காக பலவகையிலும் சிறப்பாகப் பணி புரிந்தவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த நாள் ஸ்பெயினிடமிருந்து மெக்ஸிகோ விடுதலை பெற்ற நாள். மெக்ஸிகோவின் சுதந்திர தினம்.

இந்த நாள் பப்புவா நியூகினியின் சுதந்திர தினம். அந்நாடு ஆஸ்திரேலியாவிடமிருந்து விடுதலை பெற்ற நாள்.

இந்த நாள் உலகெங்கிலும் சர்வதேச ஓசோன் பாதுகாப்பு தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.

இந்த நாள் மலேசியாவில் “மலேஷியா தினமாகக்” கொண்டாடப்படுகிறது. மேலும் அறிய:
http://en.wikipedia.org/wiki/Malaysia_Day

நன்றி: கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவிற்கு

கருத்துகள் இல்லை: