நாவினிற்கினிய
நாவல்பழம்
நெய்வேலி பாரதிக்குமார்
நாவல் பழத்தின் மருத்துவ குணங்கள் அற்புதமானவை. நாவல் பழத்திலுள்ள ஜம்போலைன் உடலில்
சேமிக்கப்படும் ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றும் செயலைத் தடுக்கும் தன்மை
கொண்டதால், சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்.
எனவே நாவல் பழச்சாற்றினை தொடர்ந்து அருந்தி வந்தாலும், நாவல் பழ விதைகளை
நிழலில் உலரவைத்து பொடி செய்து காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டு வந்தாலும்
சர்க்கரை நோய் கட்டுப்படும்.
நாவல் பழத்தோடு தேன் கலந்து சாப்பிட்டால் மூல நோய்
குணமாகும். இயல்பாக சுண்ணாம்புச்சத்தும்,
இரும்புச்சத்தும் அதிகம் என்பதால் ரத்தச் சோகை நோய் குறையும். நாவல் பழச்சாறு அஜீரணக் கோளாறை
சரிசெய்யும். சிறு நீரகத்தில் கற்கள்
இருந்தால் அவற்றை கரைக்கும் ஆற்றல் நாவல் பழத்துக்கு உண்டு. அதுமட்டுமல்லாமல் மலட்டுத்தன்மையைப் போக்கும்
ஆற்றல் நாவல் பழத்துக்கு உண்டு.
பொதுவாக நாவல் பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடக்
கூடாது. அதேபோல ஒரே நேரத்தில் அளவுக்கு
அதிகமாகவும் சாப்பிட்டுவிடக்கூடாது.
தொண்டை கட்டிக் கொள்வதோடு, ஜலதோஷம் பிடிக்கும் வாய்ப்பு அதிகம். ஒரு வேளை சுவையினால் உந்தப்பட்டு அதிகம்
சாப்பிட்டு விட்டால், ஒரு நெல்லிக்காயை தின்று கொஞ்சம் குளிர்ந்த நீர் பருகினால்
பாதிப்புகள் குறையும்.
மிகச் சமீபத்தில் மங்களூரில் உள்ள ஃபாதர் முல்லர்
மருத்துவக் கல்லூரி மாணவ-மாணவியர்கள் நாவல் பழத்திற்கு புற்று நோயைத் தடுக்கும்
ஆற்ற்ல் உண்டு என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.
நாவல் மரத்தின் இலகள், மரப் பட்டைகள் கூட மருத்துவ குணம் கொண்டவைதாம். அதன் இலைகளுக்கு பற்கள் மற்றும் ஈறுகளில்
ஏற்படும் கோளாறுகளைத் தீர்க்கும் வலிமை உண்டு.
தினத்தந்தி, முத்துச்சரம் 30.8.2014
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக