6 ஜூலை, 2018

இன்று ஒரு தகவல்-67: சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் (தமிழ் நாட்டில் செல்வ மகள் திட்டம்)


சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் (தமிழ் 
நாட்டில் செல்வ மகள் திட்டம்)

மத்திய அரசின் பெண் குழந்தைகளுக்குக்காண திட்டம் சுகன்யா சம்ரிதி
 யோஜனா. இத்திட்டம் தான் தமிழ் நாட்டில் செல்வ மகள் திட்டமாக
 செயல்பட்டு வருகிறது.

மற்ற எந்த சேமிப்பு திட்டத்தைவிடவும் வட்டி விகிதம் அதிகம். உதாரணமாக நிதியாண்டு 2015-2016ல் 9.2%.

மற்றும் வருமான வரி விலக்கு (முதலீடு செய்யும் தொகைக்குப் பிரிவு 80சி-இன் கீழ் வரிவிலக்கைப் பெறலாம்) ஆகியவை இத்திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்.

ஒரு குடும்பத்தில் இருந்து இரண்டு பெண் குழந்தைகளுக்கு இந்தக்  
 கணக்கை துவங்க இயலும். 10 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தையின்  
 பெற்றோர் அல்லது காப்பாளரால் கணக்கைத் திறக்க இயலும்.

சிறு சேமிப்பு திட்டம் போல செல்வ மகள் திட்டத்தின் வட்டி விகிதம் ஒவ்வொரு காலாண்டும் மாறிக் கொண்டே வரும்.

குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் அதிகபட்சம் வருடத்திற்கு ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்ய இயலும்.

இந்தக் கணக்கு 21 வயது ஆகும் போது அதன் முதிர்வு காலத்தை அடைந்துவிடும். அதற்குப் பிறகு வட்டி ஏதும் அளிக்கப்படாது.

மற்ற விபரங்களுக்கு:

 https://tamil.goodreturns.in/news/2018/01/05/new-update-rules-sukanya-samruddhi-yojana-scheme-2018/articlecontent-pf48706-009972.html


கருத்துகள் இல்லை: