5 செப்., 2018

ஆன்மீக சிந்தனை-91: தன்னை அறிதல்

மனித மனதில் எழும் தேவையற்ற எண்ணங்களை சீரமைக்க "தன்னை அறிவது" ஒன்றே மிகச்சிறந்த உபாயம்.

தன்னை அறிதல் பற்றி மகான்கள் கூறுவது:

தன்னை யறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை யறியாமல் தானே கெடுகிறான்
தன்னை யறியும் அறிவை அறிந்தபின்
தன்னை யர்ச்சிக்கத் தானிருந் தானே.
     ( திருமூலர் )

தன்னை அறிந்து இன்பமுற வெண்ணிலாவே
தந்திரம் நீசொல்ல வேண்டும் வெண்ணிலாவே.
       (வள்ளலார்)

என்னை அறியாமல் எனக்குளேநீ யிருக்க
உன்னை அறியாமல் உடல்இழந்தேன் பூரணமே.
       (பட்டினத்தார்)

நன்றி: திரு.Rm.R.இராஜசேகரன் அவர்கள்

கருத்துகள் இல்லை: