3 அக்., 2018

காந்திஜி நினைவுகள்-1: காந்திஜியும் ஹிட்லரும்

இந்து மகாசபை மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் பி.எஸ்.மூன்ஜி, சாவர்க்கர், கோவல்க்கர் இத்தாலி முசோலினியும் ஃபாசிசத்தையும், ஜெர்மனியின் ஹிட்லர் நாசிசத்தையும் ஆதரித்ததார்கள் ….1930 களில் இத்தகைய வலதுசாரி தலைவர்கள் ஹிட்லரையும், முசோலினையும் ஆதரித்தபோது, காந்தியார் ஹிட்லரையும், முசோலினையும் எதிர்த்தார்….காந்தியார் நினைத்திருந்தால் பிரிட்டிஷாரை விரட்ட அவர்களின் எதிரிகள் இத்தாலியோடும், ஜெர்மனியோடும் கூட்டு சேர்ந்திருக்கலாம்..காந்தியார் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற சூழ்ச்சி, தந்திரங்களில் இறங்கவில்லை...

இரண்டாம் உலகப் போரின் கொடூரத்தை அறிந்த காந்தியார் ஜூலை 23, 1939ல் ஹிட்லருக்கு கடிதம் எழுதுகிறார்..ஒரு வித தயக்கத்துடன் தான் அத்துமீறி அறிவுரை கூறுகிறேனோ என அச்சத்தோடு கடிதத்தை துவங்குகிறார். உலகப்போரை ஹிட்லர் ஒருவரால்தான் நிறுத்த முடியும் மற்றும் மானுட குல நலத்திற்காக போரை கைவிடுமாறு மன்றாடுகிறார். கடிதத்தில் ஹிட்லரை, காந்தியார் நண்பர் என்றே விளித்து எழுதி, நான் உங்களின் உண்மையான நண்பன் என்றே முடிக்கிறார். கடிதத்தின் இறுதியில் தான் ஏதாவது தவறுதலாக எழுதியிருந்தால் மன்னிக்கவும் என பணிவன்புடன் எழுதியதையும் கவனிக்கவேண்டும்.

1940 இரண்டாம் உலகப்போர் உக்கிரமடைகிறது. ஹிட்லர் மற்றும் நாஜி வதை முகாம்களைப் பற்றி அறிந்து கலக்கமடைந்த காந்தியார் இரண்டாவது கடிதத்தை டிசம்பர் 24 1940 மீண்டும் எழுதுகிறார். ஆனால் இரண்டாவது கடிதத்தில் போரை கைவிடுமாறும் மற்றும் அகிம்சை போராட்ட்த்திற்கு அழுத்தம் கொடுக்கிறார்.இக்கடிதத்தின் அழுத்த தொனி முதல் கடிதத்தை காட்டிலும் கூடுதலாக இருக்கிறது.இக்கடிதத்திலும் நண்பர் என விளித்து எனக்கு எதிரிகள் எவரும் இல்லை மற்றும் கடந்த 33 வருடங்களாக சாதி,மதம்,வர்ணம் தாண்டி மானுட சகோதரத்துவத்தை கடைபிடிக்கிறேன் என்கிறார். அடக்குமுறையில் பிரிட்டிஷ் ஆட்சிக்கும் நாஜிகளுக்கும் பெருத்த வித்தியாசமில்லை என்கிறார்.ஆனால் இந்தியர்களான நாங்கள் வன்முறையின்றி போராடுவதை விவரிக்கிறார். பிரிட்டிஷார் எங்களின் நிலத்தை அபகரிக்கலாம், உடலையும் அபகரிக்கலாம் ஆனால் எங்கள் ஆன்மாவை அபகரிக்கமுடியாது என அகிம்சை போராட்ட்த்தை விவரிக்கிறார். இறுதியில் தான் எழுதும் இக்கடிதம் முசோலினிக்கும் பொருந்தும் என எழுதி தான் என்றும் நண்பன் என்று முடிக்கிறார்.

காந்தியார் ஃபாசிசத்தையும், நாசிசத்தின் ஆபத்தையும் உணர்ந்தவர் என்பதற்கு இந்த இரண்டு கடிதங்களுமே சாட்சி…..இறுதியாக காந்தியார் ஒரு வலதுசாரி இந்துத்வாதியால் கொல்லப்பட்டார்.

காந்தியாரின் இந்த இரு கடிதங்களின் பின்ணனியில் ஒரு இந்தி திரைப்படமும் (Gandhi to Hitler) வெளிவந்தது…ஆனால் பெரிதாக கவனம் பெறவில்லை…

முதல் கடிதம்:

http://www.mkgandhi.org/letters/hitler_ltr.htm

இரண்டாம் கடிதம்:

http://www.mkgandhi.org/letters/hitler_ltr1.htm

நன்றி: திரு.வாசுதேவன் (வாட்ஸ்அப்பில் பெற்றது)

கருத்துகள் இல்லை: