எளிமை, நேர்மை, தன்னலமின்மை, கடுமையான உழைப்பு போன்ற சீரிய பண்புகளுடன் வாழ்ந்த ஒப்பற்ற தலைவர், இந்தியாவின் இரண்டாவது பிரதமர், பாரத ரத்னா லால் பஹதூர் சாஸ்திரி பிறந்த நாள்.
ஜெய் ஜவான், ஜெய் கிஸான் என்று முழக்கமிட்டு நம் படைவீரர்களையும், விவசாயிகளையும் உற்சாகப் படுத்தியவர்; பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சிக்கு வித்திட்டவர்; மூர்த்தி சிறிதெனினும் கீர்த்தி பெரிதென நிரூபித்தவர். இந்த நன்னாளில் அவர் நினைவைப் போற்றி மகிழ்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக