வெட்டுக்கிளிக்கு மேலத்தியான் தீர்வாகுமா?
Dr. கோ. பிரேமா MD(Hom),
வெட்டுக்கிளி படைஎடுப்பு பற்றி நிறைய பதிவுகள்.
அது ஒருபக்கம் கவலை.
இதற்கு தீர்வாக மேலத்தியான்(malathion) எனும் பூச்சிக்கொல்லி வானிலிருந்து விமானம் மூலம் தூவுவது என பேசப்பட்டு வருகிறது.
CDC, centre of Disease Control ன் நச்சுப்பொருட்களின் தாக்கம் பற்றி toxicology ல இத பத்தி முழுமையா படிச்சபோது தலைசுற்றுகிறது.
லின்க் கமன்டில்.
இந்த நச்சு மூச்சு சுவாசப்பாதை வழியாக, தோல் கண் வழியாக, வாய்வழி உணவு/நீர் வழியாக மனிதர்களின் உடலுக்குள் செல்லும்போது என்னமாதிரியான பாதிப்பு ஏற்படுத்தும் என்பதை இதில் படிக்கலாம்.
இது எளிதில் நீரில் கரைந்து கலந்துவிடும் தன்மை கொண்டது என்பது, பேராபத்தாக தெரிகிறது.
Neurotoxin -முதலில் இது ஒரு நரம்பியல்மண்டலநச்சு. வெட்டுக்கிளியின் மீதும் இதே செயலைத்தான் செய்கிறது. நரம்புமண்டலம் பாதித்து, அதன்மூலம் சுவாச சதைகள் செயலிழந்து சுவாசம் இல்லாமல் மரணம் ஏற்படும்.
மயக்கம், சுவாசப்பிரச்சினை(சதை செயலிழப்பால்)
கோமா, வலிப்பு, மரணம் வரை செல்லக்கூடும்.
Carcinogen(group 2A) - IARC, எனப்படும் சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி கழகம் இதை, இரண்டாம் கட்ட புற்றுநோய்க்காரணியாக இருக்க வாய்ப்புள்ளது எனவும் சொல்கிறது, as probable carcinogen (group 2A).
Reprotoxin. எலிகளில் ஆண்களில் மலட்டுத்தன்மை ஏற்படுத்துகிறது என்ற ஆதாரம் உள்ளது.
ஏன் வெட்டுக்கிளி படை ஏற்பட்டது,இதற்கு இயற்கையில் அதன் கட்டுப்படுத்தும் உயிர்ச்சூழல் என்னானது, போன்ற வழிமுறைகள் மட்டுமே நிரந்திர தீர்வாகும்.
ஆனால் தற்சமயம் எப்போதுவேண்டுமானாலும் தமிழகம் வரை வந்துவிடலாம் எனும்போது தற்காலிக தீர்வாக மேலத்தியான் போன்ற நச்சுஉபயோகித்தால், அது மனிதருக்கு உணவை காப்பாற்றி தருவதைவிட, அதே உணவின் மூலமாக மறைமுகமாகவும், ஸ்ப்ரேயின் மூலம் நேரிடையாகவும் அழிவையே தரும். ஆதலால் இந்த ஆலோசனையை அரசு மறுபரீசலனை செய்யவேண்டும்.
இதுபற்றி தேவைப்பட்டால் விரிவாக பேசுவோம்.
மாற்றாக அக்ரோ ஓமியோபதியின் ஒரு வழி உள்ளது.
அதே பூச்சியை, அல்லது அந்த பூச்சியை உண்ணக்கூடிய வேறு நன்மைதரும்(சிலந்தி போல) பூச்சியின் சாறு கொண்டு நீரில் குறிப்பிட்ட வழிமுறையில் கலந்து , அதை உபயோகப்படுத்தலாம். ஒரு பூச்சியின் சாரை பல லிட்டர் நீரில் கலப்பதால்,
பாதுகாப்பானதாகவும் இருக்கும்.
இதுபற்றி அக்ரோ ஓமியோபதியாளர் கவிராஜ், அக்ரோ ஓமியோபதியில் பூச்சி மேலாண்மை பற்றியும் தனது அனுபவ அறிவிலிருந்து எழுதியுள்ளார். அதை நண்பர் மரு. பாலா ஏற்கனவே விரிவாக தமிழ்படுத்தியுள்ளார். லினக் முதல் கமனடில்.
கவிராஜின் பெரும்பான்மை கள ஆய்வுகள் பிரேசில், ஐரோப்பா, மற்றும் ஆஸ்திரேலியா.
இம்முறை,மிக சுலபமானது, எளிமையானது, பாதுகாப்பானது, பலன்தரக்கூடியது.
நமது சூழலில் இதற்கான தீர்வாக நாமும் முயற்சி செய்து பார்க்கலாம்.
விவாதிக்க கூட நேரமிருக்கா தெரியலை.
ஆனால் மேலத்தியான் தீர்வாகாது, ஆபத்து என்பது நிச்சயம்.
அரசின் கவனத்திற்கு எடுத்துச்செல்லவேண்டும்.
ஓமியோபதி தீர்வு:
கீழே குறிப்பிட்டுள்ளவற்றை மருந்துகளாக வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
ஒரு நன்மைதரும் பூச்சி, சிலந்தி/ எறும்பு ஏதோ ஒன்றை பிடித்து அதிலிருந்து சாறு எடுத்து அது நீரில் கரைத்து நன்கு கலக்கி தெளிக்கலாம் .
அதே வெட்டுக்கிளியையும் இடித்து சாறாக்கி நீரில் கலந்து தெளிக்கலாம்.
Dr.Pn-Balasubramanian ன் பதிவிலிருந்து:
வெட்டுக்கிளி படையெடுப்பை தடுக்க ஹோமியோபதியில் மருந்துகள் உள்ளன.
1.Rove beetle
என்ற பூச்சியின் அறிவியல் பெயர்: Staphylinidae இந்த பூச்சிக்கரைசலின்(இந்த பூச்சியின் கரைசலை வீரியப்படுத்தி ஹோமியோபதி மருந்தாக பயன்படுத்துகிறது.) வாசனைக்கு வெட்டுக்கிளி வரவே வராது.(இந்த பூச்சியின் தமிழ் பெயரை நண்பர்கள் தெரிந்தால் பகிரவும்)
2.hyssopus officinalis (இந்த தாவரக்கரைசலை வீரியப்படுத்தி ஹோமியோபதி மருந்தாக பயன்படுத்துகிறது.) இந்த தாவரக்கரைசலுக்கும் வெட்டுக்கிளி வரவே வராது..ஆடுதொடா செடி எப்படி ஆட்டுக்கு பிடிக்காதோ அது போல இது வெட்டுக்கிளிக்கு பிடிக்காத வாசனையுள்ள செடி.(இந்த செடியின் தமிழ் பெயரை நண்பர்கள் தெரிந்தால் பகிரவும்)
3.aranea diadema என்ற சிலந்தி (இந்த சிலந்தியின் கரைசலை வீரியப்படுத்தி ஹோமியோபதி மருந்தாக பயன்படுத்துகிறது.) ..இந்த சிலந்தி கரைசலில் இருந்து தயாரிக்கப்படும் மருந்தின் தன்மைக்கு வெட்டுக்கிளி தலைவைத்து படுக்காது.
மேற்கண்ட ஹோமியோபதி மருந்துகளில் ஏதேனும் ஒன்றை ஹோமியோபதி மருந்துகடைகளில் வாங்கி வெட்டுக்கிளி அறிகுறி தெரிய ஆரம்பிக்கும் முன் பயிருக்கு தெளிக்கலாம்..
ஹோமியோபதி மருந்து மிகவும் குறைந்த செலவு தான் ஆகும். இன்னும் எளிதாக இந்த செடியோ பூச்சியோ கிடைத்தால் அதனை ஹோமியோபதி மருத்துவ முறைப்படி வீரியப்படுத்தியும் பயன்படுத்தலாம்.
ஹோமியோபதி மருந்து/ நாமே தயாரித்த கரைசலை, பயன்படுத்தும் முறை:
10மில்லி மருந்தை 10லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிப்பான் பயன்படுத்தி தெளிக்கலாம்...
அதிக நிலப்பரப்புக்கு 500மில்லி மருந்தை 500 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிப்பான் மூலம் தெளிக்கலாம்.
நன்றி: Dr G Prema, முகநூல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக