1 ஜூன், 2020

காரப்பரேஷன் ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு.

சென்னை முனிசிபல் கார்பரேஷன் ஊழியர்கள் 210 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படடுள்ளது :

எக்ஸ்பிரஸ் நியூஸ் சர்வீஸ். 

எனது கருத்து :

ஏதாவது தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ளாமல், நோயெதிர்ப்பாற்றலை பலப்படுத்தாமல் கொரோனா பணியில் ஈடுபடும் போது இந்த ஆபத்து நிச்சயம். இயல்பாகவே நோயெதிர்ப்பாற்றல் உள்ளவர்கள் சிலர் போராட முடியும்.

மற்றவர்கள் ஆர்சனிக் ஆல்பம், கபசுர குடிநீர், வைட்டமின் சி-டி3-ஸிங் மாத்திரை போன்றவற்றின் மூலமாகவும் நோயெதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் உணவுப் பொருட்கள் (மஞ்சள்,  மிளகு,  இஞ்சி,  பூண்டு,  சின்ன வெங்காயம்,  சீரகம்,  வெந்தயம்,  எலுமிச்சை போன்றவற்றின்  மூலமாகவும் நோய் எதிர்ப்பாற்றலை வளர்த்துக் கொள்ளாமல் கொரோனாவை எதிர்கொள்ள முடியாது என்பதை இது  நிரூபிக்கிறது.

வேதனை! 

அரசு இனியாவது மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியும், வீடுவீடாகச் சென்று தடுப்பு மருந்துகளை வழங்கியும் விரைந்து செயல்பட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்! 


கருத்துகள் இல்லை: