26 ஜூன், 2020

இன்றைய தத்துவ மேதை : சாணக்கியர்

சாணக்கியர் 

(Chanakya) (சர்வதேச சமசுகிருத  அரிச்சுவடியின்படி சாணக்கியர்காலம்: கி. மு நான்காம் நூற்றாண்டு) இவர் ஓர் இந்திய ஆசிரியர், தத்துவவாதி, பொருளாதார நிபுணர், நீதிபதி மற்றும் அரச ஆலோசகர் ஆவார். பண்டைய இந்திய அரசியல் நூல் அர்த்தசாஸ்திராத்தை எழுதியவர். இவர் கௌடில்யர் (Kauṭilya) என்றும் விஷ்ணுகுப்தர் (Vishnugupta) என்றும் அடையாளம் காணப்பட்டவர். இவர், இந்தியாவின் அரசியல் விஞ்ஞானம் மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளின் முன்னோடியாக கருதப்படுகிறார். அவரது பணிகள், பாரம்பரிய பொருளாதாரத்திற்கு ஒரு முன்னோடியாகக் கருதப்படுகிறது.  இவரது படைப்புகள் குப்த சாம்ராஜ்யத்தின் முடிவில் பொலிவிழந்தன. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அவை மீண்டும் பழக்கத்திற்கு வந்தன.


மௌரியப் பேரரசைத் தோற்றுவித்த சந்திரகுப்த மௌரியனின் முதன்மை அமைச்சராகவும் வழிகாட்டியாகவும் இருந்தவர் சாணக்கியர். இவர் மௌரியப் பேரரசு அமைவதற்கு முக்கிய காரணமானவர். கவுடில்யர், விட்ணுகுப்தர் என்ற பெயர்களாலும் இவர் அறியப்படுகிறார். ஈடற்ற அரசியல் இலக்கியமான அர்த்தசாத்திரத்தைப் படைத்தவர் இவரேயாவார். இவர் பொருளியலின்முன்னோடியாகக் கருதப்படுகிறார். இவரை இத்தாலியின் மேக்கிவல்லி என்ற சிந்தனையாளருடன் ஒப்பிடுகின்றனர். ( மேக்கிவல்லி எழுதிய நூல் பிரின்ஸ்) மேற்கத்திய உலகில் இவர் இந்தியாவின் மாக்கியவெல்லி என்று அறியப்படுகிறார். இவர் தக்சசீலப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தார். விற்பனை வரியை முதன் முதலில் அறிமுகப்படுத்தினார்.

நன்றி : திரு. நேயம் சத்யா, தத்துவங்களைத் தேடி...,  வாட்ஸ்அப் குழு 

கருத்துகள் இல்லை: