இங்கிலாந்து நாட்டை சேர்ந்த அந்தப் பெண்மணி, தனது அலுவலகத்தில் பணியில் ஈடுபட்டிருந்த போது, அந்த சிறுவன் வெளியில் இருந்து அழைத்தான்.
பெண்மணி அவனிடம், " உன்னிடம் கொடுக்க என்னிடம் காசு எதுவும் இல்லை தம்பி... இது பள்ளிக்கூடம்.." என்றார்.
சிறுவன் உடனே, " நான் உங்களிடம் யாசகம் கேட்டு வரவில்லை.. எனக்கு படிப்பு சொல்லிக் கொடுங்கள்.. போதும்.!" என்றான்.
சிறுவனின் வார்த்தைகள் அந்த பெண்மணியின் இதயத்தைத்தொட்டது.
எழுந்து வந்து சிறுவனைப் பார்த்தார்... சிறுவனுக்கு கண்பார்வை இல்லை.
அந்த சிறுவனை தனது இல்லத்திற்கே அழைத்து வந்தார் அந்தப் பெண்மணி.
அவர் பெயர் அனி ஜேன் ஆஸ்க்வித்.
பையன் பெயர் சுப்பு.
சம்பவம் நடந்த இடம் பாளையங்கோட்டை.
1888 ஆம் ஆண்டு.
அனி ஜேன் அப்போது சாராள் தக்கர் கல்லூரியின் காரியதரிசியாக பணியாற்றினார்.
சுப்புவிற்கு படிப்பு சொல்லித்தருவதற்காக மீண்டும் இங்கிலாந்து சென்று ப்ரைலி கல்வி முறை எல்லாம் கற்று, 1890 இல் பாளையங்கோட்டையில் பார்வைத்திறன் குறைந்தோர் பள்ளியை (கவனிக்க: பார்வைத்திறன் அற்றோர் அல்ல..) துவக்கினார்.
இந்தப் பள்ளியின் முதல் மாணவன் சுப்பு.
சுப்புவைப் போல இன்னும் பலர் இங்கே சேர்ந்து படிக்க ஆரம்பித்தனர்.
இதே பள்ளியில் படித்துப் பிறகு இங்கேயே ஆசிரியராகவும் சுப்பு பின்னாளில் விளங்கினார்.
திருமணம் செய்து கொள்ளாத அனி ஜேன் ஆஸ்க்வித் என்ற அம்மையாரால் துவக்கி வைக்கப் பட்ட இந்தப் பள்ளிக்கு பின்னாளில், அவரது பெயரே சூட்டப்பட்டது.
பள்ளி ஆரம்பித்து 125 வருடங்கள் தாண்டிவிட்டன.
இங்கு பாலர் மழலையர் பள்ளியில் இருந்து 12 ஆம் வகுப்பு வரை மாணவ, மாணவியர் சேர்க்கப்படுகின்றனர்.
உணவு, உடை, உறைவிடம் எல்லாமே இலவசம் தான்.
பார்வையற்றோர் என்ற மருத்துவரின் சான்றிதழ் மட்டுமே வேண்டும்.
எங்கோ இருந்து வந்த அனி ஜேன், சுமார் 23 ஏக்கர் நிலத்தில் கண் தெரியாத குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க ஒரு பள்ளியை ஆரம்பித்து விட்டு 1920 இல் சென்று விட்டார்.
ஆனால் அவர் செயலின் பயனை இன்னும் நம் மண் அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறது.
அவர்கள் சார்பாக... உங்களை வணங்குகிறேன் நன்றியுடன்
உங்களில் ஒருவர்...🙏.🙏🙏🙏
Grateful thanks to Htay Htay, New Information, Facebook.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக