பாடல் # 992 : நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம் ( ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)
கண்டெழுந் தேன்கம லம்மல ருள்ளிடை
கொண்டெழுந் தேன்உடன் கூடிய காலத்துப்
பண்பழி யாத பதிவழி யேசென்று
நண்பழி யாமே நமவென லாமே.
விளக்கம் : இதயத்தாமரையான சகஸ்ரதளத்தில், இச்சக்கரத்தின் மூலம் சிவத்தைக் கண்டு விழித்தெழுந்து அச்சிவத்துடன் கூடிக் கலந்து ஒன்றியிருந்த நிலையில், அச்சிவ சக்கரத்தின் வழியே சென்று, தன்மை கெடாத தவவழியை துணையாக கொண்டு சிவசக்கரத்தை வைத்து அன்பு கெடாத வண்ணம், சிவாயநம என்று ஓதிக்கொண்டிருக்கலாம். ( சக்கரத்தை வெளியில் பூசிப்பதால் பயனில்லை, சக்கரத்தை மனதில் எண்ணி தியானிப்பதாலேயே பயன் தித்திக்கும் என்பதை இப்பாடலின் மூலம் உணரலாம்)
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக