சித்தர் இலக்கியங்களின்
தத்துவ துளிகள்
*****************************
கோயிலாவது ஏதடா குளங்களாவது ஏதடா
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே
ஆவதும் அழிவதும் இல்லை இல்லை இல்லையே
பூசை பூசை என்று நீர் பூசை செய்யும் பேதை காள்
பூசையுன்ன தன்னிலே பூசை கொண்டது எவ்விடம்
ஆதிபூசை கொண்டதோ அனாதிபூசை கொண்டதோ
ஏதுபூசை கொண்டதோ இன்னதென்று இயம்புமே
இருக்குநாலு வேதமும் எழுத்தை அறவோதிலும்
பெருக்கநீறு பூசிலும் பிதற்றலும் பிரான் இரான்
உருக்கி நெஞ்சை உட்கலந்த உண்மை கூற வல்லிரேல்
சுருக்கம் அற்ற சோதியை தொடர்ந்து கூடலாகுமே
---- சிவ வாக்கியார் சித்தர்
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக