3 நவ., 2020

இன்றைய தத்துவம் : ஒப்புருவாக்கம் (SIMULATION THEORY)

இன்றைய தத்துவம் 👇🏽

ஒப்புருவாக்கம் கோட்பாடு என்று அழைக்கப்படும்
Simulation Theory

உண்மை என நாம் பார்த்துக்கொண்டிருப்பது அனைத்தும் உண்மையா? நாம் உயிருடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோமா? கனவு நிஜமாகவும் நிஜம் போலியாகவும் ஏன் இருக்கக்கூடாது? இந்த கேள்விகள் சற்றே குழப்பமாகவும் ஏன் பைத்தியக்காரத்தனமாகவும் கூட தோன்றலாம்.

அறிவியலின் அடிப்படையில் எந்தவொரு கேள்வியும் ஆரம்பத்தில் கருதுகோளாக, எண்ணமான மட்டுமே முன்வைக்கப்படும் பின்னர் அது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதன் பின்னரே உண்மை என ஏற்றுக்கொள்ளப்படும்…
அப்படியாக தற்போது அறிவியல் உலகில் நிரூபிக்கப்படாமல் ஆனால் அறிவியல் மேதைகளினால் ஏற்றுக்கொண்டு “இப்படியும் இருக்கலாம்” என ஆய்வுகளை நடத்திக் கொண்டிருக்கும் விடயம் அல்லது கருதுகோள் தான் “simulation theory”

simulation எனின் உருவகப்படுத்துதல் எனலாம். அதாவது உண்மையைப் போலவே தோற்றமளிக்கும் பிரதியாக உருவாக்கப்பட்ட போலி எனவும் இதனைக் கூறமுடியும். தற்போது இந்த simulation கணினி விளையாட்டுகளில் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது. ஏன் பல்வேறு ஆய்வுகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றது.
கணினி விளையாட்டுகளின் உருவாக்கப்படும் கதாபாத்திரம் ஓர் தனி உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும். ஆனால் அதனை செயற்படுத்துகின்றவர் வேறு ஒருவர் இதனைப் போலவே “இந்த உலகமும் மனிதர்களும் கதாபாத்திரங்களாக உருவாக்கப்பட்டுள்ளது” என ஆய்வாளர்கள் வாதங்களை முன்வைக்கின்றனர்.

செவ்வாய்கிரகத்தில் தாவரங்களை வளரவைக்க முடியுமா என்ற ஆய்வு விஞ்ஞானிகள் மத்தியில் அவசியப்பட்டது. இதற்காக அவர்கள் செவ்வாய்க்கு செல்லவில்லை மாறாக செவ்வாயில் உள்ள தட்ப வெட்பம், ஈர்ப்பு, வாயுத்தன்மை என்ற அனைத்தையும் செயற்கையாக உருவாக்கி செவ்வாய் கிரகத்தினை simulation ஆக உருவாக்கி அங்கு ஆய்வுகளை நடத்திவருகின்றனர்.

இதனைப்போலவே தான் அணுக்களின் கோர்வையினால் உருவாகியுள்ள மனிதர்களாகட்டும், உலகம் பொருட்கள் ஆகட்டும் அனைத்துமே போலியாக உருவாக்கப்பட்டுள்ளது என்ற வாதம் ஆய்வாளர்கள் மத்தியில் உள்ளது. தற்போது உள்ள பல அறிவியலாளர்களும் இந்த வாதத்தை ஏற்றுக்கொள்கின்றனர். elon musk (எலான் மஸ்க்) கூட இதனை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
Artificial intelligence (செயற்கை அறிவுத்திறன்) தொழில் நுட்பத்தில் தற்போது உருவாக்கப்படும் ரோபோக்கள் தானாகவே சிந்தித்து செயற்படும் திறன் கொண்டு காணப்படுகின்றது. அதேபோல மெய்நிகர் உலகங்களை உருவாக்கவும் (virtual world) கூட விஞ்ஞானம் வளர்ச்சியடைந்துள்ளது.
இப்படியாக நாளுக்குநாள் வளர்ச்சியடையும் விஞ்ஞானம் எதிர்காலத்தில் simulation ஆக உலகங்களை உருவாக்கவும் கற்றுக் கொண்டுவிடும் என ஆய்வார்கள் கூறுகின்றனர். அதேபோல அறிவியலில் உச்சமடைந்த ஓர் இனம் (வேற்றுக்கிரகங்களில் வசிப்பவர்களாக கூட இருக்கலாம்) மூலமாக சோதனை எலிகளைப் போல் உருவாக்கப்பட்டதே மனிதர்களாகவும் அதற்காக உருவாக்கப்பட்டதே பூமி எனவும் ஏன் இருக்கக் கூடாது என்ற கேள்வி முன்வைக்கப்படுகின்றது.
இந்த வாதத்தினை முன்வைப்பவர்கள் சில கேள்விகளையும் முன்வைக்கின்றனர். அதில் முக்கியமானது உயிர். மனித உடலில் உயிர் எனப்படுவது யாது? உடலின் உருவாக்கம் நடைபெருகின்றது ஆனால் உயிர் எங்கிருந்து வருகின்றது? இறப்பின் பின்னர் எங்கே செல்கின்றது இந்தக் கேள்விக்கு விடை இன்றுவரையில் இல்லை.
உயிர் எது என கண்டுபிடிக்க முடியாத போதும். உயிரின் நிறையை அறிய ஆய்வாளர்கள் முயன்றனர். 1901 களில் இதற்கான ஆய்வு நடத்தப்பட்டது. மரணத்தருவாயில் இருக்கும் நபர்களை இறப்பதற்கு முன்னரான நிறையையும், இறப்பின் பின்னரான நிறையையும் ஒப்பீடு செய்து, அந்த ஆய்வின் முடிவில் உயிரின் நிறை 21 கிராம் என கண்டுபிடித்தனர். ஆனால் இந்த உயிர் எப்படி வந்து எங்கிருந்து எங்கே செல்கின்றது என விடைகாண முடியவில்லை.

நினைவுகள் ஒரு மனிதன் இறந்த பின்னரும் 7 நிமிடங்களுக்கு மூளை செயற்பாட்டில் இருக்கும் எனவும். இந்த ஏழு நிமிடங்களில் அந்த மனிதனின் வாழ்நாள் முழுதும் நினைவுகளாக மூளை மீட்டிவிடும் எனவும் கூறப்படுகின்றது. இது ஒரு விளையாட்டு கதாபாத்திரத்தின் முடிவு போல இருக்கின்றது என்றால் இதற்கான காரணம் என்ன?

இதயம், மூளை எனப்படுவது தெரியக்கூடிய விடயம் ஆனால் மனது எனப்படும் இடம் எது? வாகனத்தை செலுத்திச் செல்லும் ஒருவருக்கு, பிரோக் அழுத்தவேண்டும், திருப்பவேண்டும், வேகம் குறைக்க வேண்டும் என்ற கட்டளைகளை மூளை தெரிவிக்கின்றது. அதே சமயத்தில் “கவனமாக செல்லவேண்டும், மோதிவிடக்கூடாது” இப்படியான குரல்கள் கேட்டுக் கொண்டிருக்கும் இந்த குரல்கள் எப்படி வருகின்றது? இது ஏன் எம் கதாபாத்திரத்தினை இயக்கும் நபரின் இல்லது கணினியின் குரலாக இருக்கக் கூடாது என simulation என்பதை நம்புகின்றவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

அடுத்தது கனவு. உண்மையில் கனவு எனப்படுவது ஏன் ஏற்படுகின்றது என்பதற்கான காரணம் இதுவரையிலும் கண்டு, பிடிக்கவில்லை. எண்ணங்களின், ஆழ்மனதின் நினைவுகளே கனவு என்றால் எந்த வித தொடர்புமே இல்லாத கனவுகள் வருவது ஏன்?

அதோபோல டேஜாவு (deja vu) புதிதாக ஓர் இடத்திற்கு செல்லும் போதும் ஏற்கனவே அங்கு சென்றதைப் போல எண்ணம் வருவது ஏராளமானோருக்கு நடந்திருக்கலாம். simulation theory என்பதை நம்புகின்றவர்கள் இது இடைத்தடங்களாக இருக்கலாம் என்கின்றனர்.

அதாவது கணினி விளையாட்டை விளையாடும் போது இடைநடுவில் நின்றுபோகும் அல்லது கதவுகள் திறக்காது விடும் இதனை பக்ஸ் என்பர் அதே போன்றதே deja vu எனப்படுவதும் எனக் கூறப்படுகின்றது.
மூளை என்பதும் கூட இதுவரையில் முற்றாக விளக்கம் காணப்படாத மர்மப்பொருள். ஒரு செக்கனுக்கு 1கோடி கட்டளைகளை வழங்கவும் வேலைகளை செய்யவும் கூடிய இந்த மூளையானது வெறும் சதைப்பகுதியே. இந்த சதைப்பகுதியின் கணக்கிடமுடியாத அளவு நினைவகம் உள்ளது எப்படி? இந்த கட்டளைகள் எங்கு சேமிக்கப்பட்டு எப்படி ஒரு இயந்திரம் போல செயற்படுகின்றது?

இந்த கேள்விகளுக்கு விடையில்லை ஆனால் simulation என்பதை நம்புகின்றவர்கள் மனிதனை உருவாக்கியவர்கள் மனிதன் இயங்குவதற்கு உருவாக்கிய கணினியே மூளை எனக்கூறுகின்றனர்.

கோடான கோடி கிரகங்கள் உள்ளபோது பூமியில் மாத்திரம் எப்படி மனித இனம் வாழ சரியாக காரணிகள் உருவாகியுள்ளது? அனைத்தும் ஒரு வட்டத்திற்குள் எப்படி நடக்கின்றது? எலிகள் எப்படி பரிசோதனைகளுக்காக வளர்க்கப்படுகின்றதோ அதே போன்றே மனித இனமும் உருவாக்கப்பட்டுள்ளது என கூறப்படுகின்றது.அவ்வளவு ஏன் மனிதன் பிறக்கின்றான் எதனை எதனையோ செய்கின்றான் வாழ்கின்றான் சாதிக்கின்றான் ஆனால் அவன் யாருக்காக உழைக்கின்றான்? எந்தவொரு பலனையும் பெற்றுக்கொள்ளாமல் இறந்தும் போகின்றான் இதே வட்டம் தானே நடக்கின்றது இது ஏன் என்ற கேள்வியை கேட்டுவிட்டு அதற்கு பதிலாக மனிதன் ஓர் பரிசோதனை எலி என்றே simulation வாதத்தை முன்வைக்கின்றவர்கள் கூறுகின்றர்.

மேலோட்டமாக பார்க்கும் போது இது பைத்தியக்காரத்தனமான ஒன்றாகத் தோன்றலாம், ஆயினும் இவர்கள் முன்வைக்கும் கேள்விகளைப் பொறுத்தமட்டில் சிந்திப்பை ஏற்படுத்துகின்ற விடயமே.
அப்படி என்றால் நாம் ஓர் கதாபாத்திரம் என்றால்? ஏன் அது உணரவே முடிவதில்லை என கேள்வி எழுப்பலாம். இதற்கு எலான் மஸ்க் அவர்கள் கூறிய பதில் “எப்படி கணினி விளையாட்டின் உள்ளே உள்ள கதாபாத்திரத்திற்கு தாம் யார் என்றே தெரியாது, தன்னுடைய உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றதோ, அதேபோலத்தான் மனிதர்களும்”.
இந்த வாதத்தை அறிவியல் உலகம் மறுக்கவில்லை 20 சத வீதமான வாய்ப்புகள் உண்டு என்றே கூறியுள்ளனர். காரணம் பூமியில் மனித இனத்தின் தோற்றம் குறித்த சந்தேகம் இன்றும் உள்ளது. பேரண்டப்படைப்பாளி என்பவர் யார்? நிஜமாகவே மனிதர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றனர்? அவர்களின் உழைப்பில் பயன் பெற்றுக் கொண்டு இருப்பவர்கள் யார்? இந்தக் கேள்விகளுக்கு இப்போது இல்லை என்றாலும் எப்போதாவது பதில் கிடைக்கும்.

            -- எழுத்தாளர் புவனேஷ்

நன்றி :

திரு.புவனேஷ்
மற்றும் 

கருத்துகள் இல்லை: