27 ஜன., 2021

பாராட்டுக்கள்!

பத்மஸ்ரீ விருது பெற்ற
*"கலைமாமணி"* 
*"வில்லிசை வேந்தர்"* 
*திரு.சுப்பு ஆறுமுகம்* 
அவர்களை வாழ்த்தி வணங்குவதில் பெருமை கொள்கிறோம்.


திருநெல்வேலி மாவட்டம்  புதுக்குளம் கிராமத்தை பூர்விகமாகக் கொண்ட *திரு.சுப்பு ஆறுமுகம் ஐயா* அவர்கள் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு மேலாக நமது சென்னை துறைமுக வாயிலில் உள்ள *வ உ சி ஐயா சிலை* முன்பு  செப்டம்பர் 5 ம் தேதி ஐயா வ.உ.சி அவர்களின் பிறந்த நாளன்று ஐயா வ உ சி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை வில்லிசையாக தொடர்ந்து வழங்கி வருபவர்.

நமது திருநெல்வேலி சைவ வேளாளர் பொது நல வளர்ச்சிக்கழகம் 2014 ஆம் ஆண்டு

*திரு.சுப்பு ஆறுமுகம் ஐயா*

அவர்களுக்கு 

*வாழ் நாள் சாதனையாளர்*

விருது வழங்கி கௌரவித்தது என்பது நமக்கு பெருமை அளிக்கக்கூடிய விசயம்.

வில்லிசை வேந்தர் *திரு.சுப்பு ஆறுமுகம்* அவர்களை 

பல்லாண்டு நலமோடு வாழ வாழ்த்தி வணங்குகிறோம்.

இங்ஙனம்,

நிர்வாகிகள்,

திருநெல்வேலி சைவ வேளாளர் பொது நல வளர்ச்சிக்கழகம்- சென்னை.

💐💐💐💐💐💐💐💐

கருத்துகள் இல்லை: