இன்று நாம் காணவிருக்கும் தத்துவம்
பகுத்தறிவு வாதம் எனப்படும்
Rationalist Philosophy
பகுத்தறிவு எனப்படுவது பொருட்களின் நிகழ்வுகளின் கருத்துக்களின் கூறுகளை அவதானித்து, ஆய்ந்து அவற்றின் இயல்புகளில் இருந்து ஆதாரபூர்வமாக புறவய நோக்கில் நிரூபிக்கப் படக்கூடிய முடிவுகளை முன்வைக்கும் வழிமுறையையும் அதை ஏதுவாக்கும் மனித அறிவு ஆற்றலையும் குறிக்கின்றது. பகுத்தறிவின் நோக்கம் மெய்ப்பொருளை அல்லது உண்மையைக் கண்டறிவதே.
பகுத்தறிவு என்பது ஒன்றை வைத்து ஒன்றை விளங்கும் நுண்ணறிவாகும். ஒரு பொருளை கண்ணால் பார்த்து நம்புவதை விட அதன் விளைவுகளை வைத்து நம்புவது பகுத்தறிவின் தன்மையாகும். உதாரணத்திற்கு தூரத்திலிருந்து புகையை கண்டு தீவிபத்து என அறிவது போன்றதாகும்.
ஏனைய பார்க்கும் அறிவு,கேட்கும் அறிவு ,தொடும் அறிவு,நுகரும் அறிவு,ருசிக்கும் அறிவு போன்ற அறிவுகள் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் பொதுவான தன்மைகளாகும். ஆனால் மற்ற ஐந்தறிவுகளால் பெறப்படும் செய்திகளை ஒருங்கிணைத்து உண்மை நிலையை கண்டறிந்து ஆராய்ந்து முடிவெடுப்பது நுண்ணறிவாகும்.இதையே பகுத்தறிவு என்றும் கூறலாம்.
“மாவும் மாக்களும் அய்யறிவினவே
மக்கள் தாமே ஆறறிவுயிரே” (தொல்காப்பியம்)
சிந்தித்துச் செயல்படுவது என்பது ஆறாவது அறிவு. அது மனிதனுக்குத்தான் உண்டு. அதிசயமான காரியங்கள் செய்யக்கூடிய உயிர்கள் உண்டு. மனிதன் செய்ய முடியாத செயல்களை ஓர் உயிர் முதல் அய்யறிவு உள்ள உயிர்கள் செய்யும். ஒரு எறும்பை எடுத்துக் கொண்டால் நமக்குத் தெரியாத வாசனை அதற்குத் தெரியும். ஒரு குருவியை எடுத்துக் கொண்டால் மனிதனால் பறக்க முடியாமல் இருக்கும்போது அது பறக்கும். ஒரு குரங்கை எடுத்துக்கொண்டால் மனிதன் தாவமுடியாத அளவுக்குத் தாவும். நாய்க்கு மோப்ப ஆற்றல் மனிதனை விட அதிகம். மனிதனுக்கு மேற்பட்ட, மனிதனால் முடியாத சில செயல்கள் மற்ற அறிவுள்ள உயிர்களுக்கு உண்டு. சிந்தித்து, வளர்ச்சிக்கேற்ற வண்ணம் தன்னுடைய வாழ்வு நிறைவு பெறும் வண்ணம் பயன்படுத்துகிற அளவு மனிதனுக்குத்தான் உண்டு. வேறு உயிர்களுக்கு இல்லை. பசி, பருவம், முதுமை, மரணம் என்ற நான்கும் மனித இனத்துக்குப் பொதுவானவை.
மனிதர்கள் சிந்திக்கிறார்கள்! மற்ற உயிரினங்கள் சிந்திப்பதில்லை! மனிதர்களுக்கு மட்டுமே பகுத்தறிவு உண்டு! மற்ற உயிரினங்களுக்குப் பகுத்தறிவு உணர்ச்சி கிடையாது! பகுத்தறிவைப் யாரும் போதிப்பதில்லை. காரணம் அது மதம் அல்ல. பகுத்தறிவைப் பற்றிப் பேசுகிறோம், எழுதுகிறோம். அதில் உண்மை இருந்தால் மட்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் தள்ளிவிட வேண்டும்.
மனிதன் சிந்திக்கும் தன்மை உள்ளவன். மனிதனின் இந்த எதையும் தீர ஆராயும் இயல்பினால் மற்ற விலங்குகளிருந்து வேறுபடுகின்றான். சிந்தனையாற்றலின் பயனாக அவன் மற்றெல்லா உயிரினங்களுக்கும் தலைவனாக விளங்குகிறான். சிந்தனை ஒன்றைத் தவிர வேறு வகைகளில் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் வேறுபாடில்லை. அவற்றைப் போலவே அவனும் உண்பதுவும் உறங்குவதும் சூழல் நிலைகளால் பாதிக்கப்படுவதுமாக இருக்கின்றான். விலங்குகள் வெறும் இச்சையினால் மட்டும் உந்தப்பட்டுச் செயல் படுகின்றன. ஆனால் மனிதன் எண்ணித் துணிந்து செயல்படுகின்றான். தன் நடைத்தையின் விளைவுகளைச் சீர்தூக்கிப் பார்க்கின்றான். அவனுடைய ஆற்றலெல்லாம் இந்தச் சிந்தனையில் தான் அடங்கியுள்ளது. அதன் மூலமாகத் தான் அவன் தன்னைக்காட்டிலும் உடல் வலுவுடையப் பிராணிகளையும் இயற்கையையும் வெற்றி கொள்ள முடிந்தது.
சிந்தனைதான் பல கலைகளாகவும் அறிவியலாகவும் தத்துவமாகவும் பரிணமித்துள்ளது.
நம்முடைய வள்ளுவ பெருந்தகை சொல்வது
எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்ப தறிவு. --திருக்குறள்
இதன்பொருள்:
எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும்= யாதொரு பொருளை யாவர் யாவர் சொல்லக் கேட்பினும்;அப்பொருள் மெய்ப்பொரு்ள் காண்பது அறிவு= அப்பொருளின் மெய்யான தன்மையை காணவல்லது அறிவு.
இவ்வகையான பகுத்தறிதலே ஏற்புடையதாக இருக்கும்.
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக