இன்றைய முக்கிய தலைப்புச் செய்திகள் - தினமலர் சென்னை, வியாழக்கிழமை, பிப்ரவரி 18, 2021
1. பிளஸ் 2 தேர்வுகள் மே 3 முதல் 21 வரை
2. நெடுஞ்சாலைகளில் மரக்கன்று நட உத்தரவு - மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர்
3. கொரோனா தடுப்பூசி நடவடிக்கை : பிப்ரவரி 17 நிலவரம் :
இந்தியாவில் தடுப்பூசி செலுத்தப்பட்டோர் எண்ணிக்கை : 91,86,757
நேற்று ஒரே நாளில் தடுப்பூசி செலுத்தப்பட்டோர் : 3,29,416
தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டோர் : 3,07,527
4. தஞ்சாவூர் : கருகும் அபாயத்தில் 300 ஏக்கர் நெற்பயிர்
5. தமிழகத்தில் ஐந்தாண்டுகளில் ரயில் நிலையங்களில் சுற்றித்திரிந்த 11,000 சிறார்களை, ரயில்வே போலீஸார் மீட்டு பெற்றோர் மற்றும் காப்பகங்களில் ஒப்படைத்துள்ளனர்
6. கோலாவுக்கு காகித பாட்டில் : சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டிக்கினை கைவிட கோகோ கோலா தீர்மானம்
7. மின்வாகன தயாரிப்பில் புதுமை : மின்வாகனங்களுக்கு அடிப்படை பாகங்களை (chassis) உருவாக்கித் தருகிறோம், அதன் மேல் கார், வேன் என்று எந்த வண்டியையும் கட்டுவித்து, விற்றுக்கொள்ளுங்கள் என்கிறது இஸ்ரேலின் மின்வாகன நிறுவனமான 'ஆர். ஈ. ஈ. ஆட்டோமோட்டிவ்'
தினமலர் சென்னை இணைப்பு
1. வேளச்சேரி -ஆதம்பாக்கம் மேம்பால மெட்ரோ ரயில் மார்ச் இறுதியில் துவக்கம் - 2022ல் பரங்கிமலை வரை நீட்டிக்க திட்டம்
2. இரண்டு புதிய ரயில் நிலையங்கள் : புழுதிவாக்கம், ஆதம்பாக்கம்
3. மதுராந்தகம் ஏரி புனரமைப்பு பணி - அரசு ரூ.120 கோடி ஒதுக்கீடு
4. வாகனக்கழிவுகளில் சிற்பங்கள் : திருவான்மியூரில் நாளை கண்காட்சி துவக்கம்
5. '3டி பிரின்டிங்' தொழில் நுட்பம் அப்பல்லோ மருத்துவ மனையில் அறிமுகம்
6. வேளச்சேரியில் 'நானோ' இயற்கை உரம் தயாரிப்புக்கூடம் திறப்பு
7. கிண்டி சின்னமலை மாநகராட்சி மேனிலைப்பள்ளியில் ரூ. 25 லட்சத்தில் நூலகம் திறப்பு
தேர்வு & தொகுப்பு - சூரி
நன்றி : தினமலர் சென்னை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக