17 பிப்., 2021

இன்றைய திருமந்திரம்

திருமந்திரம் - பாடல் #1039: நான்காம் தந்திரம் - 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)

உத்தமன் சோதி யுளனொரு பாலனாய்
மத்திம னாகி மலர்ந்தங் கிருந்திடும்
பச்சிம திக்கும் பரந்து குழிந்தன
சத்திமா னாகத் தழைத்த கொடியே.

விளக்கம்:

பாடல் #1038 இல் உள்ளபடி உத்தமாக உணர்ந்த இறைவனோடு சேர்ந்த சாதகர் ஆரம்ப நிலையில் பாலகனாய் இருக்கின்றார். அதன் பிறகு பாடல் #1036 இல் உள்ளபடி ஐந்து பூதங்களும் அவரது சாதகத்தைத் தொடர்ந்து செய்யும் பொழுது அந்த பாலகன் ஆறு சக்கரங்களுக்கும் சென்று இளைஞனாகி மலர்ந்து இருக்கின்றார். அதன் பிறகு ஆறு சக்கரங்களிலிருந்தும் வரும் சக்தி அனைத்து திசைகளுக்கும் பரந்து விரிந்து நிரம்பி இருக்கும். அதன் பிறகு ஆறு சக்திமயங்களிலும் உள்ள சக்தியானது தமது உச்ச நிலையை அடைந்து விளங்குகின்றது.

மனமார்ந்த நன்றிகள் :

கருத்துகள் இல்லை: