10 ஏப்., 2021

நலக்குறிப்புகள் : நோய்வாய்ப்படுதல்

*நோய்வாய்ப்படுதல்*


"நோய் வரும் வரை உண்பவன், நோய் தீரும்வரை பட்டினி இருக்க வேண்டும்" ஸ்காட்லாந்துப் பொன்மொழி.

"நோய்வாய்ப்படுதல்" - இதைக்  கேள்விபடாதவர்கள் இருக்க மாட்டார்கள். அது என்ன "நோய்வாய்ப்படுதல்"?
ஏன் நோய் மூக்கு படுதல், நோய்க்கண்படுதல், நோய்ககாது படுதல் என்றெல்லாம்  சொல்லாமல் நோய்வாய்ப்படுதல் என்று கூறுகிறார்கள். 

நோய்க்குக் காரணம் வாய். 
ஆம் *தேவையில்லாத உணவுகளை, தேவையில்லாத அளவு, தேவையில்லாத நேரத்தில் உண்பது.*

உங்களால் பத்து வாழைப் பழங்களை ஒரே நேரத்தில் சாப்பிட முடியாது.
உங்களால் ஒரே நேரத்தில் பத்து ஆப்பிள்களைச் சாப்பிட முடியாது.
இரண்டு, மூன்று சாப்பிட்டவுடன் மனநிறைவு அடையும். அதற்குமேல் உண்ண முடியாது.

ஆனால் இட்டிலி, தோசை ஆகியவற்றை தின்னும் ஒருவர் கேட்பார் " இது எட்டாவது தோசையா?, ஒன்பதாவது தோசையா?" என்று கேட்பார். எத்தனை இட்லி சாப்பிட்டேன்? சாம்பார் வச்சு நாலு, சட்னி வச்சு அஞ்சு, இட்லிப் பொடி வச்சு இரண்டு, கடைசியில தயிர் தொட்டு ஒண்ணு... இப்படி இட்டிலியைக் கூட்டுபவர்களும்  உண்டு.

சமையல் உணவுகள், உப்பு, புளிப்பு, காரம் நிறைந்தது. எனவே நமது தேவை என்ன என்று தெரியாமல் தின்று நோய்வாய்ப் படுகிறோம்.

*நோய்வாய்ப்பட்ட விலங்குகள் எந்த உணவும் உண்பதில்லை. உடல் நிலை சரியாகும் வரை உண்ணாமல் பட்டினி இருக்கின்றன.*

ஆனால் நாம் காய்ச்சல் வந்தாலும் கஞ்சியக் குடிக்கணும் (அதுக்கு அப்புறம் மாத்திரை வேறே சாப்பிடணும்) அப்டின்னு ஒரு கொள்கை வச்சிருக்கோம்.

தொடர்ந்து சமையல் உணவை உண்பவர்களின் கவனத்திற்கு, எந்த நோய் வேண்டுமானாலும் உங்களுக்கு இருக்கலாம். 
*உண்ணும் உணவைக் குறைத்து, மாதத்தில் ஒருநாளாவது உண்ணா நோன்பு இருந்து உங்கள் வயிற்றுக்கு சிறிது ஓய்வு அளிக்க மறக்காதீர்கள்.*

*நாள்தோறும் இயன்ற அளவு இயற்கை உணவான பழங்களையும், கொட்டைப் பருப்புகளையும்(nuts) உண்ணுங்கள்.*
அது உங்களை நோய் வாய்ப் படாமல் காப்பாற்றும். 
நன்றி.

(பகிர்வு)

கருத்துகள் இல்லை: