அனுபவம் புதுமை -
கவிஞர் நெல்லையப்பன்
அனுபவம் எனும் சீப்பு
கையகப்படும் போது
முடியேயிராது தலையில்;
பின் சீவுவது எப்படி
சிக்கு எடுப்பது எப்படி?
நீதி:
பந்தி வைப்போம்
நம் அனுபவத்தை
மற்றவர்க்கு பயன்படுமாறு.
பின் நான் என் செய்வது?
இருக்கவே இருக்கிறது
மற்றவர் அனுபவங்கள்.
தொட்டுத்தான்
தீ சுடுமென்று
அறிய வேண்டுமா?
சூடு பட்டவன்
சொல் போதாதா?
பிறர் தவறுகள்
நமக்குப் பாடம்;
தவறுகளை
நாமே செய்து
ஒவ்வொன்றாய்
பாடம் படிக்க
ஆயுள் போதாதே?
Only wise people
learn from
others' mistakes;
the rest of us
have to be
the other people.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக