2 அக்., 2021

வாழ்த்துக்கள்!

      தஞ்சாவூர்க் கவிராயர் 

இன்று அகவை 69 ல் அடியெடுத்து வைக்கிறேன்
          புதிய சங்கற்பங்கள்
உள்ளத்தில் எப்போதும்
உவகை பொங்குக
என் வாக்கினிலே
ஒளி பிறந்திடுக
சின்னக்கவலைகள் என்னைத்
தின்னாது ஒழிக 
புதிய சொல்
புதிய சிந்தனை
புதிய பார்வை என்னுளே
தோன்றுக

இனி ஊதுகிறசங்கை எக்காளமாய் ஊதுவேன்
மூடர் மனதில் என்னைப்பற்றிய பொய்மதிப்பு உண்டாக
இடம் கொடேன்

பாரதி சொல்வது போல
ஓயாது உழைத்து
இவ்வுலகப்  பெருமைகள்
யாவும் பெற முயல்வேன்
இலையெனில்
விதிவசம் என்றிருப்பேன்
ஓம்

கருத்துகள் இல்லை: