திருமந்திரம் - பாடல் #1265: நான்காம் தந்திரம் - 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)
எழுத்தவை நூறொடு நாற்பத்து நாலும்
எழுத்தவை யாறது வந்நடு வன்னி
எழுத்தவை யந்நடு வச்சுட ராகி
எழுத்தவை தான்முத லந்தமு மாமே.
விளக்கம்:
பாடல் #1264 இல் உள்ளபடி ஏரொளிச் சக்கரத்திலிருந்து வெளிப்படுகின்ற நூற்றி நாற்பத்து நான்கு எழுத்துக்களும் சாதகருக்குள் இருக்கின்ற ஆறு ஆதார சக்கரங்களில் அடங்கி இருக்கின்ற ஆறு எழுத்துக்களாக இருக்கின்றன. அந்த ஆறு எழுத்துக்களுக்கும் நடுவில் அக்னியாகவும் அதற்கு நடுவில் இருக்கின்ற சுடராகவும் இருக்கின்றன. இவை அனைத்தும் சாதகருக்குள் முதலாகவும் பாடல் #1259 இல் உள்ளபடி அவரைத் தாண்டிய அண்ட சராசரங்களில் இருக்கின்ற அனைத்து உலகங்களுக்கும் விரிந்து இருக்கும் ஏரொளிச் சக்கரத்தின் அந்தமாகவும் இருக்கின்றன.
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக