29 செப்., 2018

படித்தேன்-4: ஜெயமோகனின், "இன்றைய காந்தி"

இன்றைய காந்தி - ஜெயமோகன்

ஜெயமோகன் அவர்களைப் பற்றிப் பேசும்போதெல்லாம் பிரமிப்பு என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துகிறேன். இதுவும் அவரது பிரமிக்கத்தக்க படைப்பே. தெளிவான சிந்தனை, ஆழமான புரிதல், எளிய நடை. மகாத்மாவைப் பற்றி அவர் நிறையப் படித்திருக்க வேண்டும், ஆழமாகச் சிந்தித்திருக்க வேண்டும். கண்மூடித்தனமாக அவரை வழிபடுபவர்கள், வெறுப்பவர்கள், அவதூறு பேசுபவர்கள் மத்தியில் அவரைப் பற்றிய ஒரு பாரபட்சமற்ற உண்மையான சித்திரத்தைத் தந்துள்ளார்.

என்னைப் பொறுத்தவரை இந்த வாசிப்பு காந்தி ஒரு மகாத்மா, ஒரு மகான் என்பதை ஒரு சரியான புரிதலோடு உறுதி செய்துகொள்ள உதவியுள்ளது. காந்தியை எனக்கு இன்னும் நெருக்கமானவராக உணரமுடிகிறது.

ஜெயமோகன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியும், பாராட்டுக்களும்.

அனைவரும் படிக்கவேண்டிய அற்புதமான புத்தகம்.

கருத்துகள் இல்லை: