30 ஜன., 2020

நலந்தரும் மூலிகைகள் : ஆடாதொடை

#ஆடுதொடா இலையில் (ஆடாதொடை) இருக்கும் அற்புதமான மருத்துவ குணங்கள்!
  
ஆடாதொடை இலையும் ஐந்து குறுமிளகும் சாப்பிட்டால,ஆடாத உடலும் ஆடும்,பாடாத குரலும் பாடும் என்ற ஒரு பழமொழியுண்டு. இப்படிப்பட்ட ஆடாதொடை மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம்.

காசம் குணமாக ஆடாதொடை இலையை கஷாயம் செய்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் காசம் குணமாகும்.உடலில் ஏற்படும் வலிகள் குறைய ஆடாதொடை வேர்,கண்டங்கத்திரி வேர் பொடி இவைகளை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் வலிகள் குறையும்.

ஈரல் வலி குறைய ஆடாதொடை இலைச் சாற்றை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகும். மூச்சுத்திணறல் குணமாகும். நுரையீரலில் ஏற்பட்டுள்ள புண் குணமாக மருதம்பட்டை, ஆடாதொடை பொடி இவற்றை வெள்ளாட்டுப் பாலில் கலந்து குடித்து வந்தால் நுரையீரலில் ஏற்பட்டுள்ள புண் குணமாகும்..

சளித்தொல்லை குறைய ஆடாதொடை இலை,வெற்றிலை, துளசி,தூதுவளை இவைகளை எடுத்து லேசாக அரைத்து வேகவைத்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் சளித்தொல்லை நீங்கும். வயிற்று வலி குறைய ஆடாதொடை இலையையும், சங்கிலையையும் எடுத்து தண்ணீரில் போட்டு காய்ச்சிக் குடித்து வந்தால் வயிற்று வலி குறையும்.

நன்றி: உஷா ரவிகுமார், நாட்டு மருந்து, முகநூல்

கருத்துகள் இல்லை: